Advertisement

மாவட்ட இணைப்புச்சாலை விரிவுபடுத்த கோரிக்கை

Share
பொள்ளாச்சி:நெகமத்தில் இருந்து, திருப்பூர் மாவட்ட எல்லையை இணைக்கும், நான்கு கி.மீ., தொலைவுள்ள ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, இரு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் கிழக்கு எல்லையில், திருப்பூர் மாவட்டம் துவங்குகிறது. இந்நிலையில், ஒன்றியத்தில் உள்ள, திருப்பூர் மாவட்ட இணைப்பு ரோடுகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், நெகமம் - என். சந்திராபுரம் இடையிலான, நான்கு கி.மீ., தொலைவுள்ள ரோடு மட்டும் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை விரிவுபடுத்தவில்லை. நெகமம் பகுதியில் இருந்து, தேங்காய், கொப்பரை, தென்னை நார் கழிவுகள், கயிறு மற்றும் ஓலை பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், இவ்வழியாகவே திருப்பூர் மாவட்டத்துக்குள் நுழைகின்றன.ரோட்டில், பல இடங்களில் குறுகிய, ஆபத்தான வளைவுகள் இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க, குறிப்பிட்ட, நான்கு கி.மீ., தொலைவு ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, வடக்கு ஒன்றிய அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement