Advertisement

திருச்செந்தூர் ரயில் நிரந்தரமாக ரத்து: மாற்று ரயிலுக்கு மக்கள் கோரிக்கை

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கி வந்த பாலக்காடு - திருச்செந்துார் ரயில், நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ரயில் இயக்கங்களில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.அதில், பாலக்காடு - திருச்செந்துார் இடையே இயங்கி வந்த பயணிகள் ரயில் (எண், 56769/56770) நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அந்த ரயில், பாலக்காடு - மதுரை இடையே மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில், தென்மாவட்ட மக்கள் அதிகம் வசிக்கும் சூழலில், சொந்த ஊருக்கு செல்ல வசதியாகவும், திருச்செந்துார் சென்று வர வசதியாகவும் இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டதற்கு உரிய காரணங்கள் எதுவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கவில்லை.பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:திருச்செந்துார் ரயில் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது. அதற்கு பதிலாக, கோவை - கிணத்துக்கடவு - உடுமலை - வழியே திருச்செந்துாருக்கு அதிவேக பயணிகள் ரயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மதுரை மற்றும் சேலம் கோட்டங்கள் முன்வர வேண்டும். அப்போது தான், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான தென்மாவட்ட மக்கள் பயன்பெறுவர். இது குறித்து, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement