Advertisement

பராமரிப்பில்லாத மயானம் சீரமைக்க வலியுறுத்தல்

Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, மன்றாம்பாளையத்தில் உள்ள மயானம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்றாம்பாளையத்தில் மயானம் உள்ளது. இப்பகுதியில் இறந்தவர்களை தகனம் மற்றும் அடக்கம் செய்யும் மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மயானத்தில் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யாததால், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. விஷ பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால், இறந்தவர்களின் உடலை தகனம் மற்றும் அடக்கம் செய்ய வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளை கொண்டு மயானத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement