Advertisement

ரயில்வே பாலம் ரோட்டில் குழி: வாகன ஓட்டுனர்கள் அவதி

Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பாலம் அருகே, ரோட்டில் குழிகள் அதிகரித்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கிணத்துக்கடவில், கொண்டம்பட்டி செல்லும் ரோட்டின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் நுாறு மீட்டர் துாரத்துக்கு ரயில்வேத் துறையால் தார்ரோடு அமைக்கப்பட்டது.இவ்வழியாக, வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், தார் ரோடு சேதமடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்வதால், ரோட்டில் உள்ள குழிகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும், பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது.தார் ரோட்டில் உள்ள குழிகளுக்கு, 'பேட்ச் ஒர்க்' செய்யவும், பாலத்தில் தேங்கும் தண்ணீர் வெளியேறும் வகையில் சீரமைக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement