Advertisement

புதிய தொழில்முனைவோர் 38 பேருக்கு ரூ.2.32 கோடி! மானியம்

Share
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு திட்டங்களில், கடந்த ஐந்து மாதங்களில், புதிய தொழில்முனைவோர் 38 பேருக்கு, ரூ.2.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், சேவை சார்ந்து, 10 லட்சம் ரூபாய் முதலீட்டிலும்; உற்பத்தி சார்ந்து, 25 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்கலாம்.
கல்வித்தகுதி தேவையில்லை.ஆனால், சேவை தொழிலுக்கான முதலீடு, 5 லட்சத்துக்கு அதிகமானாலோ, உற்பத்தியாக இருப்பின், முதலீடு தொகை, 10 லட்சத்தை கடந்தாலோ, தொழில்முனைவோர், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். இந்த திட்டத்தில், நகர்புற தொழில்முனைவோருக்கு, திட்ட மதிப்பீட்டில், 25 மற்றும் கிராமப்புற தொழில்முனைவோருக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மற்றொரு திட்டமான 'நீட்ஸ்'- ல், முதல் தலைமுறை தொழில்முனைவோர், தொழில் துவங்க வங்கி கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் கண்ணன் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டில், நீட்ஸ் திட்டத்தில், 60 நபருக்கு, 5.88 கோடி ரூபாய்; பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 71 நபருக்கு, 2.10 கோடி; வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 215 நபர்களுக்கு, 1.35 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் சிரமம் ஏற்பட்டாலும்கூட, இந்த திட்டங்களில் பயனாளிகளை இணைத்து, வங்கி கடன் பெற்றுத்தருவதில் வேகம்காட்டி வருகிறோம். கடந்த மார்ச் முதல் தற்போதுவரை, நீட்ஸ் திட்டத்தில், 8 பேருக்கு, 1.60 கோடி ரூபாய்.பி.எம்.இ.ஜி.பி., திட்டத்தில், 11 பேருக்கு, 69.45 லட்சம்; யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தில், 19 பேருக்கு, 2.58 லட்சம் என, மூன்று திட்டங்களிலும் சேர்த்து, 38 நபர்களுக்கு, மொத்தம் 2.32 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க விரும்புவோர், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    எப்படி பதிவு செய்வது? தயவுசெய்து அவர்களின் வெப்சைட் பிரசுரிக்க முடியுமா?

Advertisement