Advertisement

ஆய்வு! அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் அரசு கட்டடங்கள்... பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை

Share
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் பல அரசு கட்டடங்கள் செயல்பாட்டிற்கு வராமல் வீணாகின்றன.

நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் ஏழை மக்கள் பயன்பாட்டுக்காக ஆலை ரோட்டில் ரயில் நிலையம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.60 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டபட்டது. ஆனால் இது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.இந்த கட்டிடத்தை துாய்மை பணியாளர்களுக்கு வேலையை பிரித்து வழங்கும் வார்டு அலுவலகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அதிகாரிகள் அலட்சியத்தால் ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபம் பாழாகி வருகிறது.

அதேபோல் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட சுகாதார வளாகங்களும் பல இடங்களில் திறக்கப்படவில்லை. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பல லட்சம் செலவில் வான்பாக்கம் உட்பட பல இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களும் பயன்படாமலேயே பாழாகி வருகிறது.மேலும் ரூ.ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட பஸ் நிலையமும் பயன்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுகிறது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்க மேல் பாதியில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ஏற்பாடு செய்த சிமண்ட் களமும் பயன்படாமல் உள்ளது. அங்கு ஒரு நாள் கூட உரம் தயாரிக்கும் பணி நடக்கவில்லை.

கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்குவதோடு பணி முடிந்ததாக அதிகாரிகள் நினைப்பதால் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமலேயே மக்கள் வரிப்பணம் பாழாகி வருகிறது. கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு வராத திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பது நல்லது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement