Advertisement

அமெரிக்காவில் எரிவாயு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் பலி

Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் இயற்கை எரிவாயு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மெரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் என்ற இடத்தில் இயற்கை எரிவாயு சேமிப்பு கலன் உள்ளது. இங்கு ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அருகிலிருந்த கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டாகின. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்து இடிபாட்டில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    அமெரிக்க வீடுகள் வத்திப்பெட்டி மாதிரி இருக்கும் ..செங்கல்லாவது கான்க்ரீட்டாவது ....பிளைவுட்டும் மரமும் தான் .....

Advertisement