Advertisement

ராகுலின் கருத்தில் முதிர்ச்சியில்லை: ஜவடேகர் பதிலடி

Share
புதுடில்லி: 'இஐஏ 2020' வரைவு ஆபத்தானது என கூறிய ராகுலின் கருத்து முதிர்ச்சியற்றது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி தந்துள்ளார்.

'இஐஏ 2020' (EIA 2020- Environment Impact Assessment) வரைவு நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இழுக்கு மட்டுமல்ல, அது ஆபத்தானதும் கூட என காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்தார். மேலும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு போரிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் நமது இளைஞர்கள், இந்த காரணத்துக்காக நிச்சயம் போராட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: 'இஐஏ 2020' வரைவுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமென சில தலைவர்கள் எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இது வரைவு அறிக்கை தான். முழுமையான அறிக்கை அல்ல. 150 நாட்கள் மக்களின் கருத்து கேட்கப்படும். கொரோனா பரவல் என்பதால் தான் 150 நாட்கள். இல்லாவிடில் 60 நாட்கள் மட்டுமே கருத்துக்களை தர அனுமதிக்கப்பட்டிருக்கும்.

மக்களிடமிருந்து இதுவரை ஆயிரக்கணக்கான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. அவை நிச்சயம் பரிசீலிக்கப்படும். இறுதியில் தான் முழுமையான அறிக்கை வெளியிடப்படும். இப்போது போராட்டத்திற்கு அழைப்பவர்கள், தங்கள் ஆட்சியின் போது, எவ்வித கலந்தாய்வும் இல்லாமல், மிகப்பெரிய முடிவுகளை எடுத்தவர்கள். 'இஐஏ 2020' வரைவு குறித்து ராகுல் கூறியுள்ளது முதிர்ச்சியற்றது; தேவையில்லாதது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • P.K. GANESAN - chennai ,இந்தியா

    இந்த ஐம்பது வயது குழந்தையின் வாயில் விரலை வைத்தால் சப்புமா அல்லது விரலைக் கடிக்குமா? நம் தாய்த் திருநாட்டின் சாபக்கேடு இந்த புண்ணியவான்.

  • chinnathambi 2 - chennai,இந்தியா

    இப்போது தான் தெரிந்ததா? விட்டு தள்ளுங்க சார் அடுத்த தேர்தல் வரை இவங்க இப்படித்தான் பினாத்திக்கிட்டே இருப்பாங்க

  • blocked user - blocked,மயோட்

    பாதி நூற்றாண்டு கடந்த பின்னரும் குழந்தைத்தனம் போகவில்லை என்று கௌரவமாக சொல்கிறார்..

  • Aarkay - Pondy,இந்தியா

    கருத்தில் மட்டுமா முதிர்ச்சியில்லை???

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    ஜம்பது வயது குழந்தை ஒன்று அரசியல் பேசுகிறது வியப்பாகவே உள்ளது.....

Advertisement