Advertisement

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ., கொரோனாவுக்கு பலி

Share
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில், வியாபாரிகள் ஜெயராஜ், மகன் பெனிக்ஸ், ஆகியோர் இறந்தனர். வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு, எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி, சிறப்பு எஸ்.ஐ., பால்துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (28)

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    கொரானாவினால் இறப்பு சதவிகிதம் ரொம்பவும் குறைவு தான், அப்படியிருக்க பலர் தப்பிக்க வழிவகுக்கப்பட்டதா?

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இப்போ இவர் சாவுக்கு யார் பொறுப்பேற்பது?

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இவரால் துன்புறுத்தி கொல்லப்பட்டதாக கூறப்படும் அந்த இரண்டு விசாரணை கைதிகளுக்கும் கொரானா சோதனை ஏன் செய்யப்படவில்லை..........அவர்களால் தமிழ கம்பெனியின் ரகசியம் வெளிவரும் எனபதாலா?......

  • Shroog - Mumbai ,இந்தியா

    கொலை பழி யாரையும் விட்டு போகாது. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

  • அறவோன் - Chennai,இந்தியா

    நீதிமன்றத்துக்கு நேரம், ஒரு வேலை மிச்சமாகியிருக்கிறது

Advertisement