Advertisement

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு

Share
சென்னை; தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், இன்று(ஆக., 10) முதல் செயல்பட உள்ளன.

தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பயிற்சியாளர்கள் உள்ளனர். மேலும், இவர்களை சார்ந்து, நேரடியாகவும், மறைமுகமாகவும், 1.50 லட்சம் பேர் உள்ளனர். இந்நிலையில், ஊரடங்கால், மார்ச் முதல் அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன. இதனால், நடை பயிற்சிக்கு கூட செல்ல முடியாமல், மக்கள் கஷ்டப்பட்டனர்.
மேலும், உடற்பயிற்சி கூடங்களை நடத்துவோர், வாடகை, மின் கட்டணம், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். இன்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், 15 வயது முதல், 50 வயதுக்கு உட்பட்டோருக்கு மட்டுமே, பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி பெறுவோர், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

சாதாரண முக கவசம் அணிய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் மட்டுமே, ஒரு கருவியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பயிற்சி பெறுவோரின் உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும், இன்று முதல் செயல்பட உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    அப்படியே டாஸ்மாக் பாறையும் திறக்கவும், இவர்களை வேதா சாநிதிஸிரையே அருந்தும் குடிமக்களுக்கான அரசு திறக்கவேண்டும் எதனால் காற்றில் அழச்சொல் பரவும் அதனால் காரோண ஒளியும் எப்புடி குடிமகன் கணக்கு ஹி ஹி ஹி

Advertisement