Advertisement

மலரும் நினைவுகள்!

Share
'என்ன ஆச்சு இவருக்கு... திடீரென அடிக்கடி நலம் விசாரிக்கிறாரே' என, காங்கிரஸ், எம்.பி., ராகுலின் நடவடிக்கையை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், கட்சியில் உள்ள அவரது விசுவாசிகள்.ராகுல், காங்கிரஸ் தலைவராக பதவியேற்றதுமே, தனக்கு நெருக்கமான ஒரு நட்பு வளையத்தை உருவாக்கினார்.

'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், ராகுல் தான் பிரதமர்' என்ற பிரசாரத்தை, இந்த குழுவினர் திரும்ப திரும்ப செய்து வந்தனர். சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா, மிலிந்த் தியோரா, ஜிதின் பிரசாதா, சந்தீப் தீட்ஷித், ஆர்.பி.என்.சிங் ஆகியோர், இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மோடி பிரதமரானதும், இந்த குழு கலகலத்து விட்டது. ராகுல், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின், இந்த குழுவின் செயல்பாடுகளும் முடங்கின.

ராகுலும், இவர்களுடனான தொடர்பை குறைத்தார். தற்போது, இந்த குழுவில் இருந்தவர்களில் ஜோதிராதித்யா சிந்தியா, பா.ஜ.,வுக்கு தாவி விட்டார். சச்சின் பைலட்டும் கழன்று விட்டார்.சமீபகாலமாக, தன் பழைய நண்பர்களுடன் அடிக்கடி பேசத் துவங்கியுள்ளார் ராகுல். நலம் விசாரிப்பது, அரசியல் நிகழ்வுகள் பற்றி கேட்பது என, அவர்களை தொடர்பு கொண்டு வருகிறார்.

'கட்சியில் மீதமுள்ளவர்களையாவது தக்க வைக்க வேண்டுமே என்ற பயம், ராகுலுக்கு வந்து விட்டது. அதனால் தான், மலரும் நினைவுகளில் மூழ்கியுள்ளார்' என, கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • madhavan rajan - trichy,இந்தியா

    ராகுலைவிட மற்றவர்கள் அரசியல் அனுபவம் அதிகம் உள்ளவர்கள். ராகுல் தான்தான் அடுத்த பிரதமர் என்ற ஆணவத்தில் யாரையும் மதிக்காமல் தலைவர் என்ற தோரணையில் நடந்துவந்தார். மற்றவர்களும் அவரவர்கள் மாநிலத்தில் ஒரு குழு வைத்துள்ளார்கள் அதற்கு அவர்கள்தான் தலைவர்கள். அதைக் காட்ட ஆரம்பித்தவுடன்தான் ராகுலுக்கு நிலவரம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. அவர்கள் இணைந்து கட்சியை ஆதரிக்காவிட்டால் பில்டிங்க் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்ற நிலைதான் என்பது. இப்போது சிபல், சிங்வி , போன்ற மூத்த கட்சித்தலைவர்களும் சில அறிவுரைகளை சோனியா மூலமாக அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த மாற்றம். ராகுல் பேசுவதை கட்சியில் வேறு யாரும் பிரதிபலிக்காதது அவருக்கு வருத்தம். ஆனால் ராகுல் கூறுவதில் முழுவதும் உண்மை இல்லை என்பதை தெரிந்த அனுபவஸ்தர்கள் அதை பற்றி கூறி பல்பு வாங்க விரும்பவில்லை. ராகுல் எதை வேண்டுமானாலும் பேசலாம் ஏனென்றால் அவரை கட்சியினரும் மக்களும் பெரிதாக அறிவுள்ளவர் என்று ஏற்பதில்லை.

Advertisement