Advertisement

நல்ல ரோட்டை தோண்டி புதுப்பிப்பு

Share
மானாமதுரை:மானாமதுரையிலிருந்து பரமக்குடி செல்லும் ரோடு நல்ல நிலையில் இருந்தாலும் அதை பெயர்த்து மீண்டும் புதுப்பித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மானாமதுரையிலிருந்து தெ.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் ரோட்டில் வாரச்சந்தை பகுதியிலிருந்து கன்னார் தெரு வரை ரோடு மிகவும் மோசமாக உள்ளது.மூங்கில் ஊரணியில்இருந்து பரமக்குடி வரை நன்றாக உள்ள ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் தோண்டி மீண்டும் ரோட்டை புதுப்பித்து வருகின்றனர்.

மூங்கில் ஊரணி கண்ணன் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது மானாமதுரை பகுதியில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் ரோட்டை மராமத்து செய்து வருகின்றனர்.இந்த பகுதியில் ரோடு போடப்பட்டு சில வருடங்களே ஆன நிலையில் நன்றாக உள்ள ரோட்டை பெயர்த்து புதுப்பிக்கின்றனர். அதற்கு பதிலாக நகரில் பல இடங்களில் குண்டும்,குழியுமாக உள்ள ரோட்டை புதுப்பித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement