Advertisement

காக்க காக்க, கனகவேல் காக்க!

Share
இந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்தி மிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வட மொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப்படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு.


கந்தபுராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் இலக்கணத்தோடு முருகனைத் தொடர்பு படுத்தி, சான்றோர் மகிழ்வர். முருகனின், 12 கைகள், உயிர் எழுத்து என்றும், கையில் உள்ள வேல் ஆயுத எழுத்து என்றும் கூறுவர். ஆறு முகங்களும் பன்னிரண்டு விழிகளும் மெய்யெழுத்து பதினெட்டை குறிக்கின்றன என்பது நம்பிக்கை.முருகனின் கொடி சேவல், நெடில் என்றும் முருகனின் வாகனமான மயில், குறில் என்றும் சொல்லபடுகிறது.

கலியுக வரதன் கந்தன்தமிழர் இல்வாழ்க்கை மரபுப்படி, தெய்வானை திருமணம் கற்பியலாகவும், வள்ளி திருமணம் களவியலாகவும் குறிக்கப்படுகிறது.'ஒரு தனி முருகன் வந்து உதித்தனன் உலகம் உய்ய' என்று முருகனின் அருள்மிக்க தன்மையை, கச்சியப்பர் பாடுகிறார். தமிழில் திட்டினால் கூட, முருகன் வாழ வைப்பான் என்ற பொருள் பட, 'முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்பான்' என்று, கந்தர் அனுபூதியில் பாடுகிறார்.


கலியுக வரதன் கந்தன் என்ற பொருளில், ஏராளமான இசைப்பாடல்கள் உண்டு.அடியார்களுக்கு முருகன் அருள் செய்பவன் என்பதற்கு, பழங்காலம் முதல், தற்காலம் வரை சான்றுகள் உள்ளன. 'கற்கிமுகி' என்ற பூதத்திடம் சிறைப்பட்டோரை, திருமுருகாற்றுப்படை பாடி, நக்கீரர் காப்பற்றினார் என்று ஒரு செய்தி உண்டு.அண்மை நுாற்றாண்டுகளில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகளுக்கு, முழங்காலில் ஏற்பட்ட ஒரு நலிவை, செவிலி உருவத்தில் வந்து, முருகன் ஆற்றிய வரலாறும் உண்டு.சமீபத்தில், 50 ஆண்டுகளுக்கு முன், நிலச்சீர்திருத்த உதவி ஆணையராக இருந்த கவிஞர் ஐயாரப்பன், சைதாப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமிக்கு, 'தாரீர் ஒளி' என்ற பதிகம் பாடி, கண்ணொளி பெற்றது உண்மை நிகழ்வே.தமிழில் கந்தபுராணம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்த சஷ்டி கவசம் ஆகிய பல்வேறு பனுவல்கள், அன்றாட வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.


இவற்றுள், கந்த சஷ்டி கவசம், பிணி நீக்கும் ஸ்தோத்திரம். கந்த சஷ்டி கவசம், சமீபத்தில், ஒரு விவாதப் பொருள் ஆகி இருக்கிறது.தெய்வ வழிபாட்டு இலக்கியத்தில், பிறப்பு உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் இருப்பதாக, ஒருசாராரால் இழிவுபடுத்தப்பட்டது. உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுவது இலக்கியங்களில் வழக்கமான ஒன்று.வள்ளுவர் கூட, 1087-ம் குறளில், 'முலை' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

கந்தர் சஷ்டி கவசம்நம் மருத்துவத் துறையில், கண்ணுக்கு ஒரு மருத்துவர்; பல்லுக்கு ஒரு மருத்துவர்; தோலுக்கு ஒரு மருத்துவர்; எலும்புக்கு ஒரு மருத்துவர்; நரம்புக்கு ஒரு மருத்துவர் என இருப்பதைப் போல, மனித உறுப்புகளில் எந்த உறுப்புக்கும் நோய் அபாயம் உண்டு.நோய் தீர்க்கும் ஸ்தோத்திரத்தில், கண், கால், கை, நெற்றி, செவி, வாய், கழுத்து, தோள் என்ற உறுப்புகள் போல், பிட்டம், ஆண்குறி, முலை, வட்டக்குதம் ஆகிய உறுப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. கந்தர் சஷ்டி கவசம், எல்லா உறுப்புகளுக்கும் பொதுவானது.


கவசத்தைப் பாராயணம் செய்வோர், எந்தப் பகுதியில் நோயோ, அந்த பகுதியில் உள்ள நோய் தீர்வதற்கான வேண்டுதலை முன் வைக்கின்றனர்; பலர் குணமாகியும் உள்ளனர்.கந்தர் சஷ்டி கவசத்தின், 238 வரிகள், 952 சொற்களில், நான்கு சொற்களை பிரச்னை ஆக்கியது, மதச்சார்பான இலக்கியத்தையும், அது சார்ந்த மக்களையும் இழிவுபடுத்தி ஆனந்தப்படுவதே தவிர வேறு ஒன்றும் இல்லை.கடவுள் என்பது இழிவானால், கடவுள் மறுப்பும் ஒரு இழிவு தான் என்பதை பலர் மறந்து விடுகின்றனர்.


பல ஆண்டுகளுக்கு முன், ஈ.வெ.ரா., துவங்கிய கடவுள் மறுப்பு இயக்கத்தை, ராஜாஜியோ, காமராஜரோ கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.'மத நம்பிக்கைக்கு உலை வைப்பது தவறு' என்று யாருமே அவருக்கு எடுத்து சொல்லவில்லை. ஆத்திகர்களும், ஈ.வெ.ரா.,வை எதிரியாகப் பார்த்தனரே தவிர, அவரை அணுகியிருந்தால் பிரச்னை தீர்வாகலாம் என்று சிந்திக்கவில்லை. தீபாவளி சரவெடி வெடித்து ஓய்ந்த பின், சில வினாடிகள் கழித்து, ஓரிரண்டு வெடிகள் தனித்தனியாக வெடிப்பது போல, பழைய விதைகள் அவ்வப்போது முளைக்கின்றன.

முன்மாதிரியான மாநிலம்கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், குளிர் காய்வதும், அதைப் பலர் ஆதரித்து அறிக்கை வெளியிடுவதும், தமிழகத்தில் தான் நடக்கும். இந்த விதத்தில், ஒரு முன்மாதிரியான மாநிலம் என்ற பெருமை நமக்குண்டு. ஹிந்து அமைப்பாளர்களுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும், ஒரு வேண்டுகோள். பூனை குறுக்கே வருவது சகுனத்தடை என்பதால், பூனைகளே இருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது.


பரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்; கற்கள் விழத் தான் செய்யும்.நம் மதம், பாரம்பரிய சிறப்பு பெற்றது. நுாறு ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்தவ கல்லுாரியின் பேராசிரியராக இருந்த, டாக்டர் மில்லர், 'கடவுள் எங்கும் நிறைந்து இருப்பவர் என்ற கொள்கை, மற்ற மதங்களைக் காட்டிலும், ஹிந்து மதத்தில் தான் தெளிவாக இருக்கிறது' என்று பாராட்டியுள்ளார். ஆகவே, பாரம்பரிய பெருமை பெற்ற ஒரு வலுவான கட்டடமாகிய, ஹிந்து மதத்திற்கு, மழைத் துாறல்களால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது!


டாக்டர் வா.மைத்ரேயன்


அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,


தொடர்புக்கு:maitreyan1955@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இவரு எல்லாம் இப்ப யாரு கண்டுகிறார்ங்க முருகன் காட்டுகிட்டாதான் உண்டு

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இறைத்தொண்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டால் பாராட்டலாம். இறைவனின் புகழை பரப்புவதாக காண்பித்து அரசியல் புதிய வாழ்வு பெற ninaiththu எழுதி இருந்தால் கவனமாக இருக்கவேண்டும். பிஜேபி யிலிருந்து அம்மா கட்சிக்கு சென்ரூ பதவி பெற்று பின்னர் அங்கு ஒதுக்கப்பட்டதால் தாமரைக்கோ அல்லது தளபதி கட்சிக்கோ முயற்சித்தால் அது அரசியல். பக்தியில் அரசியல் புக கூடாது. சிறப்பாக எழுதியது ஆசிரியரை ஊகிக்கலாம் தெரிகிறது. மக்கள் பிரதிநிதல் பதவியின் பொது செய்த சேவைகளை மட்டும் தான் முக்கியமாக பார்க்கவேண்டும். மக்கள் சேவை செய்யாத அரசியல் வாதிகள் பின்னுக்கு செல்வது இயல்பாகவும் நடக்கும்.

 • KavikumarRam - Indian,இந்தியா

  சிறந்த பதிவு.

 • VT.Rajan - Hosur,இந்தியா

  இதை விட அதிக விளக்கம் எதுவும் தேவை இல்லை. நன்றி வணக்கம்

 • Suppan - Mumbai,இந்தியா

  திருக்குறளில் மட்டுமல்ல பல பண்டைய தமிழ் இலக்கியங்களில் முலை அல்குல் போன்ற வார்த்தைகள் விரவிக்கிடக்கின்றன. ராமசாமி தன் சீடர்களை அழைத்து தமிழ் இலக்கியங்களில் உள்ள இந்த மாதிரியான வார்த்தைகளை எடுத்து நீங்கள் பேசும்பொழுதும் எழுதும்போதும் பயன்படுத்தி இவை எவ்வளவு "மோசமானவை' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள் என்றார். கம்ப ராமாயணத்தில் உள்ள இந்த மாதிரியான வார்த்தைகளை எடுத்து ராமசாமியின் அடிப்பொடியான அண்ணாதுரை கம்பரசம் என்ற மஞ்சள் "இலக்கியத்தை எழுதினார். அவர் முதலமைச்சகர் ஆனபிறகு இதைப் பற்றிய கேள்விகளைத் தவிர்த்தார்.. ஆனால் இன்னொரு "சீடர்"பாலசுப்ரமணியம் என்பவர் திருவாசகத்தைப் படித்துத் தெளிவு பெற்று திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சமயச் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். அவர் நாத்திகப் பேயிடமிருந்து விடுதலை பெற்றார். பின்னர் அவர் திருவாசகமணி பாலசுப்ரமணியம் என்று அறியப்பட்டார். ராமசாமிக்கு பயங்கர கோபம். இங்கே எழுத முடியாத வார்த்தைகளில் திட்டினார். திருவாசகமணி பாலசுப்ரமணியம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பெரியபுராணத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார். அதை முடிக்கும் முன்னர் சிவனடி சேர்ந்தார். இதை பற்றி திராவிடக் கட்சிகள் இப்பொழுது பேசுவதில்லை.

Advertisement