Advertisement

டவுட் தனபாலு

Share
தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், எந்த கட்சியுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும் என்பது குறித்து, கட்சியினர் குழம்ப வேண்டாம். இம்முறை தேர்தலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே, கூட்டணியை முடிவு செய்து விடுவோம்.


@@'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், 2021 மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள, தமிழக சட்டசபை தேர்தலுக்காக, இன்னும், இரண்டு, மூன்று மாதங்களில் நீங்கள், கூட்டணியை முடிவு செய்து விடுவீர்கள் என்பது தெரிகிறது. உங்கள் அவசரத்தை பார்க்கும் போது, உங்கள் கட்சியினர், வேறு கட்சிகளுக்கு தாவி விடாமல் தடுக்கும் முயற்சியோ என்ற, 'டவுட்' வருகிறது!


பத்திரிகை செய்தி:
வீடுகள் தோறும், இன்று மாலை விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க செய்து, கடவுள் முருகனை வழிபடும்படி, தமிழக, பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகள், அழைப்பு விடுத்துள்ளன. கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கூட்டத்திற்கு எதிராக, வேல் பூஜை நடத்த, இந்த அழைப்பை, அவை விடுத்துள்ளது.'டவுட்' தனபாலு: கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய நபர், உடனடியாக கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு வெளியே வர முடியாதபடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்காக சில நாட்கள் மட்டும், ஹிந்துக்கள் மத்தியில் கோபம் தொனித்தது. அதையே சாக்காக வைத்து, ஹிந்து ஓட்டு வங்கியை ஏற்படுத்த, சங் பரிவார் அமைப்புகள் முயற்சிக்கின்றனவோ என்ற, 'டவுட்' இதனால் வருகிறது.இ.பி.எஸ்., தமிழக முதல்வர்:
தமிழகத்தில், கொரோனா முழுமையாக குறைந்ததும், பொது போக்குவரத்து துவங்கும். அதன் பின், 'இ - பாஸ்' முறை ரத்து செய்யப்படும். அதுவரை, அந்த முறையை எளிமைப்படுத்தும் பணிகளை, அதற்கான குழு மேற்கொள்ளும்.'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அடுத்த ஆண்டு வரை, இ - பாஸ் தொடருமோ என்ற, 'டவுட்' வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அதுவரை, இ - பாஸ் நடைமுறையை பின்பற்றி, எதிர்க்கட்சிகளையும், பிற கட்சியினரையும், வெளியிடங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கும் எண்ணம் உள்ளதோ என, நடுநிலையாளர்களுக்கு, டவுட் உள்ளது. lllகாங்., முன்னாள் தலைவர் ராகுல்:
சீனாவை எதிர்த்து நிற்பதை விடுங்கள். சீனாவின் பெயரை சொல்லக் கூட, நம்முடைய பிரதமருக்கு தைரியமில்லை. நம் எல்லைக்குள் சீன ராணுவம் இல்லை என மறுப்பது, இணையதளத்தில் இருந்து அது தொடர்பான ஆவணங்களை நீக்குவது ஆகியவற்றால், உண்மையை மறைக்க முடியாது.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், சீனாவைப் பார்த்து, நம் பிரதமர் மோடி அஞ்சுவது போலல்லவா இருக்கிறது. அப்படி அஞ்சினால், சீன சமூக வலைதளங்களுக்கு, இங்கு தடை விதிப்பாரா; எல்லையில், நம் ராணுவத்தை குவிப்பாரா; சீனாவுக்கு, 'செக்' வைக்க, துாதரக ரீதியில் நடவடிக்கைகளை எடுத்து வருவாரா என்ற, 'டவுட்'டுகளுக்கு பதில் சொல்லுங்க!பிரதமர் மோடி:
பிளஸ் 2 கல்வி முறைக்கு பதில், 5+3+3+4 என்ற கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் நலனுக்காக பட்டயப் படிப்புகள், இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு கல்விக் கொள்கை இருக்க போகிறது.'டவுட்' தனபாலு: நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள, பா.ஜ., தவிர்த்து, பெரும்பாலான அரசியல் தலைவர்கள், 'புதிய கல்விக் கொள்கையால், நாடே பின் தங்கி விடும்; தமிழ் மொழி அழிந்து விடும்' என்றல்லவா தவறாக பிரசாரம் செய்கின்றனர். சரி, பிளஸ் 2 போய்விடும்; அந்த படிப்பை, பிளஸ் 4 என்றா சொல்ல வேண்டியிருக்கும்; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா:
கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை திறக்க வலியுறுத்தி, நாளை அறிவித்திருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. போராட்ட நாளில், முதல்வர், துணை முதல்வர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், 12ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி காரணமாகவும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.'டவுட்' தனபாலு: கோயம்பேடு சந்தை தான், கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் என, இப்போது வரை நம்பப்படுகிறது. நோய் தொற்று இன்னும் குறையவில்லை. இந்த நேரத்தில், கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினால், மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதால், ஒத்திவைத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' வருகிறதே!lll
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இம்முறை தேர்தலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே, கூட்டணியை முடிவு செய்து விடுவோம்- பிரேமலதா.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், கவசம் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் புதிது புதிதாக பூஜைகள் செய்யத்தான் வேண்டும் என்று யாரையும் கட்டாய படுத்த முடியாது

Advertisement