Advertisement

தி.மு.க., திருந்தவே திருந்தாது!

Share

இதுக்கே, 'டென்ஷன்' ஆகலாமா?



முதல்வர் இ.பி.எஸ்., மதுரையில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். பின், நிருபர்களை சந்தித்தார்.நிருபர் ஒருவர், 'தமிழக அரசு, கொரோனா பாதிப்பை மறைத்து, அறிக்கை வெளியிடுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே...' என, கேள்வி எழுப்பினார்.முதல்வர் கூறுகையில், 'அதிகாரிகள் வழங்கும் தகவல்களை தான், அறிக்கையாக வெளியிடுகிறோம்... இதில், எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை... மறைத்து என்ன வரப்போகிறது? அதனால் அரசுக்கு என்ன லாபம்? குற்றம் சாட்டுவதே எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாக இருக்கிறது...' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'இதுக்கே முதல்வர், 'டென்ஷன்' ஆகுறாரே... கொரோனா காலம் என்பதால, எதிர்க்கட்சிகள் அறிக்கை மட்டும் வெளியிடுறாங்க... கொரோனா முடிஞ்சதுன்னா, எந்த வேலையையும் பார்க்க விடாம, போராட்டங்கள், 'ஸ்டார்ட்' ஆகிடுமே...' என்றதும், அருகிலிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

நம்பிக்கை தானே வாழ்க்கை!



சென்னை செங்குன்றம் இடுகாட்டில், துாய்மை பணியாளரின் சடலத்தை புதைக்க, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அனுமதி அளிக்க மறுத்தது. இதனால் துாய்மை பணியாளர்கள், அங்குள்ள சமுதாய கூடம் எதிரில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.எஸ்.ஐ., சரவணன், மறியல் செய்தோரிடம், 'அரை மணி நேரம், மறியல் செஞ்சுட்டீங்க... உங்கள் பிரச்னை, பத்திரிகையாளர்கள் மூலமா, எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு... பிரச்னைக்கு தீர்வும் கிடைச்சிடும். அதனால், மறியலை விலக்கிக் கொள்ளுங்கள்...' என, கோரிக்கை விடுத்தார்.துாய்மை பணியாளர்கள், அவரை சந்தேகத்துடன் பார்த்தனர். அதை புரிந்து கொண்ட, எஸ்.ஐ., சரவணன், 'நான் சொல்றதை நம்புங்க... நம்பிக்கை தான் வாழ்க்கை' என்றார்.நிருபர் ஒருவர், 'ம்... போலீசோட நிலைமைய பார்த்தீங்களா... உளவியல் மருத்துவர் பணியையும் செய்ய வேண்டி இருக்கு...' என்றதும், சுற்றியிருந்தோர், 'உச்...' கொட்டி நகர்ந்தனர்.

தி.மு.க., திருந்தவே திருந்தாது!



விழுப்புரத்தில், மத்திய மாவட்ட, தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதற்கு, தலைமை தாங்கிய, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி பேசுகையில், 'பூத் கமிட்டி கண்காணிப்பு உறுப்பினர்களாக, நிர்வாகிகளுக்கு வேண்டிய நபர்களை நியமிக்கக் கூடாது... தகுதியான மற்றும் திறமையான நபர்களை தான், தேர்வு செய்யணும்...' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர், 'ஆமாம்... தி.மு.க.,வில், தலைவர்களுக்கு வேண்டியவங்களுக்கு மட்டும் தான், 'சீட்' கொடுப்பாங்க... ஆனால், தேர்தல் வேலையை, தொண்டர்கள் செய்யணும்... தி.மு.க., திருந்தவே திருந்தாது பா...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தலைவருக்கு மட்டுமில்லை, அவர் மகன் பேரன் மனைவி எல்லாருக்கும் வேண்டியவர்களுக்கு தான் சீட் கிடைக்கும். எங்குமே தொண்டன் ஆயுட்காலத் தொண்டன் தான் அதிர்ஷ்டம் இருந்தால், மரணத்துக்கு இரங்கல் செய்தி கிடைக்கும்

Advertisement