Advertisement

பாவம், அவர்களை விட்டுவிடுங்கள்!

Share
ஆர்.சேச்சப்பா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜன்னல் அருகில் உட்கார்ந்திருந்த ராஜாவை பார்த்து, ஒரு குருவி, 'முடிந்தால், என்னை பிடித்துப் பார்' என, கிண்டல் செய்தது. ராஜாவும், எப்படியோ, அந்த குருவியை பிடித்து விட்டார். உடனே குருவி, 'ராஜா, என்னை மன்னித்து விடு... தெரியாமல், உன்னை கேலி செய்து விட்டேன்; என்னை விட்டு விடு' என, கெஞ்சியது.

உடனே ராஜாவும், 'பாவம்' என்று, அந்த குருவியை விட்டுவிட்டார். தப்பித்த குருவி, மரக்கிளையில் உட்கார்ந்து, மீண்டும் ராஜாவை கேலி செய்தது. அந்த குருவியை நினைத்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாராம், ராஜா. இந்த கதை போலத் தான், இருக்கிறது, நாத்திக கும்பலின் செயல்பாடுகள்.

தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதி, 'ஹிந்து என்றால் திருடன்' என்றார். சிறிது காலம் கழித்து, 'எங்கள் கட்சியில், ஒரு கோடி ஹிந்துக்கள் உள்ளனர்' என்றார். அதாவது, 'தி.மு.க.,வில், திருடர்கள் ஒரு கோடி பேர் இருக்கின்றனர்' எனக் கூறினார். தற்போது, கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த கூட்டம், ஹிந்துக்களின் எதிர்ப்பை கண்ட பின், மன்னிப்பு கேட்கிறது. 'நாங்களும், ஹிந்து தான்... கோவிலுக்கு செல்வோம்; சுவாமி கும்பிடுவோம்' என, கெஞ்சுகிறது.

இந்த நாத்திக கும்பலின் வீரம் என்பதெல்லாம், வீண் ஜம்பம் தான். எதிர்த்தால், தரையில் படுத்து விடுவர். ஹிந்துக்கள், சகிப்புத்தன்மையோடு பொறுமையாக இருந்ததால், அவர்களின் ஆட்டம் அதிகமாக இருந்தது. இப்போது, ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், 'நாங்கள் ஹிந்து விரோதி அல்ல' என, குப்புற விழுந்து விட்டனர்.சரி... பாவம், அவர்களை விட்டு விடுங்கள்!

***

'டன் வந்தான்; டிக்கிட்டு போயிட்டான்!'ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: பல குரூரமான, அநாகரிக வார்த்தைகளால், சொந்த கட்சியினராலே விமர்சிக்கப்பட்டவர், முதல்வர், இ.பி.எஸ்., என்பதை, மறக்க முடியாது. ஆனால், அதை கடந்து, கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார்.அன்று, முதல்வர், இ.பி.எஸ்.,யை அநாகரிகமாக விமர்சித்தோர், இன்று, 'எங்கள் முதல்வரை, 'பழனி' என, எப்படி சுருங்கப் பதிக்கலாம்' என, நம் நாளிதழ் மீது பாய்கின்றனர். என்ன கொடுமை!

ஒரு முட்டாள் பணியாளர், தன் எஜமானிடம், அவரை தேடி வந்தோரை, மரியாதை குறைவாக, அவரவர் பெயரை குறிப்பிட்டு, தகவல் சொன்னானாம். இதனால் கோபம்அடைந்த எஜமானர், 'இனி, அனைவரது பெயருக்கு முன், 'திரு' என குறிப்பிட வேண்டும்' என, கட்டளை இட்டாராம்.அதிலிருந்து, அந்த வீட்டிற்கு யார் வந்தாலும், 'திரு' சேர்த்து கூறினானாம், அந்த முட்டாள் பணியாளர். கோபமுற்ற எஜமானர், 'இனி, 'திரு'ன்னு சொல்லவே கூடாது' என,கண்டிப்பாக உத்தரவிட்டாராம்.

ஒருநாள், அந்த பணியாளர் வேகமாக வந்து, 'டன் வந்தான்; டிக்கிட்டு போயிட்டான்...' என்றானாம். குழப்பமடைந்த எஜமானர், நீண்ட நேரம் போராடி, அவன் கூறியதை புரிந்து கொண்டாராம்... அதாவது, 'திருடன் வந்தான்; திருடிக்கிட்டு போயிட்டான்' என்பதை தான், 'திரு' நீக்கி, சொன்னானாம், அந்த முட்டாள் பணியாளர்.

இன்று, 'பழனி' என எப்படி சுருக்கலாம் என, கோபப்படுவோரை பார்க்கையில், அந்த முட்டாள் பணியாளர் கதை தான் நினைவுக்கு வருகிறது.முன்னாள் முதல்வர், ஜெயலலிதா ஆட்சியின்போது, அவரை பற்றிய தகவல்களை, ஒட்டுமொத்த ஊடகமும், கதிகலங்கி பதித்தபோதே, 'ஜெ.,' என்ற ஒற்றை எழுத்தில் சுட்டிக்காட்டிய நெஞ்சுரம் மிகுந்தது தான், நம் நாளிதழ். அதன் பின், மற்ற பத்திரிகைகளும், அதை பின்பற்றின.

செய்தியின் தலைப்பில், எழுத்து சுருக்கம் முக்கியமானது. அதை, ஆண்டாண்டு காலமாக, நம் நாளிதழ் கடைப்பிடித்து வருகிறது.வரலாறும் தெரியாமல், பத்திரிகை தர்மமும் புரியாமல், விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவோரை என்வென்று சொல்வது?

***

அறிக்கைக் கட்சிகள் அதிகரிப்பு!அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் இதுவரை, கூட்டணி ஆட்சி அமையாதது, நம் அதிர்ஷ்டம்.நிலையான ஆட்சி அமைவதால், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு, எதிர்க்கட்சிகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம், எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது.

இல்லையெனில், அந்த கட்சியின் பெயர், மக்களுக்கு மறந்து விடும்.தற்போது, 'கொரோ னா' காலம் என்பதால், போராட்டம் நடத்த முடியவில்லை. அதனால், தினமும் ஓர் அறிக்கை வெளியிடுவது, எதிர்க்கட்சிகளின் பொழுதுபோக்காக மாறிவிட்டது.

இந்த அறிக்கை பெரும்பாலும், சாதாரண பிரச்னையை, ஊதி பெரிதாக்கி, அரசை கவிழ்க்க முடியுமா என்ற நப்பாசையுடன் அமைகின்றது.உதாரணத்திற்கு, எதிர்க்கட்சிகளின் பீதியூட்டிய அறிக்கைகளும், நீதிமன்ற நாடலும் தான், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குழப்பத்திற்கு காரணமே தவிர, அரசு அல்ல.ஒரு சிலர், 'கருத்து கண்ணாயிரமாகி' சமூகப் பிரச்னையை விமர்சிப்பது போல, அரசை மிரட்டுகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற பிரச்னைகளை கூட, அரசே திட்டமிட்டு நடத்தியது போல, 'ஜோடிப்பு' அறிக்கை வெளியிடுகின்றனர்.

ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கி, அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய கடமை, எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. அந்த நோக்கம் சிதைந்து, அடுத்த தேர்தல் வரை காத்திருக்கும் பொறுமையும், எதிர்க்கட்சியினருக்கு போய் விட்டது.இதன் மூலம், எதிர்க்கட்சிகள் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து வருகின்றன. வெறும் அறிக்கை விடும் கட்சிகள், தமிழகத்தில் பெருகி விட்டன.

தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணியமைத்து, ஒன்றிரண்டு, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., சீட்டுகளை கையகப்படுத்துவதில் தான், பல கட்சிகள் உயிர் வாழ்கின்றன.இது போன்ற காலாவதியான கட்சிகளை ஒழிக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து, அரசியலில் நெருக்கடியையும், குழப்பத்தையும் குறைக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • மோகன் -

    பாவம் விட்டு விடுங்கள். ஆனால் ஒட்டு மட்டும் போட வேண்டாம். திருட்டு கும்பலை கருவறுக்க வேண்டும்.

Advertisement