Advertisement

இ - பாஸ் அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! : நீக்க வலுக்கிறது கோரிக்கை

Share
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் மாரடைப்பால் கடந்த மாதத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய மாரடைப்புக்குக் காரணம், இ.பாஸ்.


ஐந்து நாட்களுக்கு முன்பு, அவருடைய தாயாரின் மரணத்துக்குப் போவதற்கு, உடனடியாக அவருக்கு இ---பாஸ் கிடைக்கவில்லை. அதை நினைத்து நினைத்தே மனம் புழுங்கிய அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். சென்னையில் இருக்கும் ஒரு இளைஞரின் தாயார், விருதுநகரில் இறந்துவிட்டார். இ-பாஸ் கிடைக்கவில்லை. தாயின் முகத்தை இறுதியாகப் பார்க்கும் வெறியில் கிளம்பி வந்துவிட்டார். அவரைப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டார்கள். இரவு 2 மணிக்கு நண்பர்களும் உறவினர்களும் சென்று, தாயார் இறந்தது உண்மையென்று விளக்கி அழைத்து வந்துள்ளனர்.

கோவையில் மகள் வீட்டுக்கு வந்த அந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு வயது 84. குடியிருப்பது மகன் குடும்பத்துடன் சிவகாசியில். சிகிச்சை பெறுவதும் அங்குள்ள டாக்டர்களிடம்தான். அங்கே போவதற்காக ஐந்து முறை இ-பாஸ்க்கு விண்ணப்பித்துவிட்டார். மருத்துவச் சான்றுகள் அனைத்தையும் இணைத்தும் இதுவரை கிடைக்கவில்லை.


இறப்பு, திருமணம், சிகிச்சை மற்றும் சொந்த ஊருக்குத் திரும்புதல் போன்ற காரணங்களுக்காக மட்டுமே, இ-பாஸ் அனுமதிக்கப்படுவதாக கூறுகின்றனர் அதிகாரிகள். ஆனால், இதற்காக விண்ணப்பித்தாலும் உரிய ஆவணங்கள் இல்லையென்று மறுப்பதே அதிகமாக நடக்கிறது.அதேநேரத்தில், ஒரு சில பிரவுசிங் சென்டர்களில் கேட்கும் பணத்தைத் தந்தால் உடனே இ-பாஸ் கிடைத்து விடுகிறது. இ-பாஸ் கொடுப்பதில் அதீதமாக முறைகேடும் ஊழலும் நடக்கிறது என்பதால், இதை கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது, மறுக்கத்தக்க விஷயமில்லை. அதனால்தான், அவருடைய கருத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கு இ.பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்தது. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்பதற்காக, இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடம் ஒப்படைத்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் இ-பாஸ் என்ற நடைமுறையே இல்லை. அந்த மாநிலங்களில் கொரோனா பரவுவது நம் மாநிலத்தை விட குறைவாகவே உள்ளது.

இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்குமே அனுமதிக்க வேண்டும்; அல்லது இந்தத் திட்டத்தையே கைவிட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடுமையாக தண்டிக்கலாம்!தற்போதுள்ள சூழ்நிலையில், அனாவசியமாக இ-பாஸ் எடுத்து, வெளியூர்களுக்கு சென்று, 'ரிஸ்க்' எடுப்பதற்குமக்கள் யாரும் தயாராகயில்லை என்பதுதான் உண்மை. இ-பாஸ் நடைமுறையை எடுத்துவிட்டால், சுற்றுலா மையங்களிலும், சுப, துக்க காரியங்களிலும் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதுதான் அரசின் அச்சம். அவ்வாறு அரசு அனுமதித்த எண்ணிக்கைக்குக் கூடுதலாக எங்காவது யாராவது கூடினால், அவர்களின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். - நமது சிறப்பு நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (95)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இ பாஸ் ஆரம்பித்த முதல் வாரத்தில் நன்றாக இருந்தது. அதிலும் போவதற்கு இ பாஸ் உண்டு திரும்புவதற்கு சிக்கல் தான் என்ற குறை. எந்த மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கிறோமா அந்த மாவத்தில் இருந்து இ பாஸ் வழங்கினார்கள். பின்னர் எந்த மாவட்டத்திற்கு போகவேண்டுமோ அந்த மாவட்ட ஆட்சியர் இ பாஸ் வழங்கவேண்டும் என்று மாறிய நாளிலிருந்து இ பாஸ் வியாபாரமாக்கப்பட்டது. இ பாஸ் முறையானது இரண்டு சக்கர வாகனத்தில் தனியாக செல்வோரை ஊக்குவிக்கிறது. இதனால் தான் பலர் சென்னையிலிருந்து தூத்துக்குடி நெல்லை எல்லாம் இரண்டு சக்கர வாகனத்திலேயே சென்றார்கள். நடந்து செல்வத்தையும் இரு சக்கரா வாகனத்தில் செல்வத்தையும் ஊக்கு விக்கிறதா அரசு இ பாஸ் முறை மூலம்? பாஸ் விற்கப்படுகிறது என்பது நூற்றுக்கு புள்ளி இரண்டு சதவீதம் மட்டுமே பொய்யான செய்தியாக இருக்கும். இ பாஸ் நீக்காத அரசு வரும் தேர்தலில் நிச்சயம் நீக்கப்படும். வெளிநாடுகளிலிருந்து திரும்பிய எங்களுக்கு இ பாஸ் கிடைக்கவே இல்லை, அதற்காக எத்துணை நாட்கள் பாஸ் கிடைக்கும் என்று தலைவர் பதவி கிடைக்கும் முதல்வர் பதவி கிடைக்கும் என்பவரை போல காத்து இருக்கமுடியுமா. பல ஆயிரம் கி மீ பறந்து வருவதற்கு இருந்த தடைகளை எல்லாம் சரி செய்து வந்தாயிற்று , சில நூறு கி மீ என்ன பெரிய விஷயம் என்று வந்து ஊருக்கு வந்து சேர்ந்தோம். இனி எதை எழுதி என்ன பயன். இ பாஸ் மருதத்த்வர்களுக்கு உங்களது ஓட்டுக்களை தராதீர்கள் என்றே இனி செய்தியாக்குவோம், அதை பெரிது படுத்துவோம். வீடு தேடி தெரு தெருவாக வரத்தானே செய்யவேண்டும் ஒட்டு கேட்டு. அப்போது இருக்கிறது இவர்களுக்கு. வாருங்கள் ஒன்று சேர்வோம். மக்களை வதைக்கும் எந்த செயலுக்கும் வாக்கு சீட்டு மூலம் பதிலளிப்போம்.

 • Raja Vardhini - Coimbatore,இந்தியா

  இ பாஸ் விஷயத்தில் தமிழக அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.... முதல்வருக்கு தவறான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு..... எனக்கு தெரிந்து மக்களின் அதிருப்தி பரவலாக உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய குளறுபடிகள் தேவையில்ல…

 • Mohan Chintalapalli - Chennai,இந்தியா

  MY AUNTY DIED AT RENIGUNTA WHERE SHE IS ALONE AT ASHRAM OF HER WISH EVERY MONTH ONE OF OUR FAMILY MEMBER USE TO VIST TO SEE HER. DUE TO POST CORONO SINCE APRIL WE COULD NOT ABLE TO MEET HER DUE TO FEAR AND AGING SHE LOST HER LIFE DUE TO THIS E PASS WE ABLE TO SAW HER AFTER DETH PLEASE THINK IS E PASS MUST

 • arvind - CHENNAI,இந்தியா

  தமிழ்நாடு அரசு இந்த இபாஸ் முறையை முழுவதுமாக நீக்கி விட வேண்டும் . பொது மக்கள் குறிப்பாக வேலைக்கு செல்வோர் , எமெர்ஜென்சி விஷயங்களுக்கு சொந்த ஊருக்கு செல்வோர்களுக்கு முடியாத விஷயமாக உள்ளது.

 • arun - Chennai,இந்தியா

  Central Government says no e -pass or e-permit is required for movement of goods or people - other state governments are also not insisting. TN Government must understand the frustration of the people - People have put up with this agony for more than 5 months - the Government must remove the e -pass tem - being safe is not only the responsibility of the State but also rests with the people - it is not that everyone is going to jump out of their house if this e pass is removed - only those who need to move will. The very thought that you are now free to move will itself give a big relief to the people & set their minds free & remove the insecurity or fear faced, particularly by the senior citizens. Request the Government to please consider

Advertisement