Advertisement

இன்று (ஆக.7) புதிய கல்வி கொள்கை மாநாடு : பிரதமர் மோடி உரை

Share
புதுடில்லி : தேசிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். கடந்த, 34 ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த கல்வி கொள்கைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில், 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த புதிய கல்வி கொள்கையில், உயர் கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கும் நிகழ்ச்சிக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலை மானிய குழு ஆகியவை இன்று ஏற்பாடு செய்து உள்ளன.

'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி துவக்க உரையாற்ற உள்ளார். அப்போது, புதிய கல்வி கொள்கையின் முக்கியத்துவம் குறித்து, மோடி விளக்க உள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • மனிதன் - மதுரை,இந்தியா

    இனி தமிழகத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். ஓட்டல் வேலைக்கு எல்லாம் போகமாட்டீங்களா? குறைந்தபட்சம் நான்கு மொழி பேசுபவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருப்பார்கள். ஆனால் பனிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் படித்தும் ஆங்கிலம் வரவில்லை என்பவர்கள்தான் அதிகம். எனவே எவர்களுக்கு பணம் இருக்கிறதோ அவர்கள் சிறந்த பள்ளிக்கூடங்களில் படித்து அவர்கள் வெளிநாடு செல்வர். மற்றோர்கள் இங்கேயே கிடைத்த தொழிலைச் செய்வர். எதுக்கு வெளிநாடெல்லாம் போய்ட்டு? அப்படின்னு ஒரு புத்திசாலி கேட்பான். இந்தி தெரியாத புத்திசாலிகள் அப்துல்கலாம்,சுந்தர்பிச்சை, இஸ்ரோ தலைவர்களாக இருந்த மயில்சாமி அண்ணாதுரை,இப்பொழுது இஸ்ரோ தலைவர் சிவம். இப்படி சொல்லிட்டே போகலாம். தேவைப்படுபவர்கள் கற்றுக் கொள்ள தடையில்லாமல் இருந்தாலே போதும். இதென்ன ராணுவமா ஒவ்வொன்றையும் கட்டாயப்படுத்த.

  • ilaiyaraja muthu -

    அரசு பள்ளிகளில் கண்டிப்பு இல்லாத கல்வி..... எதற்கு பயன்படுகிறது..... அரசியல் அமைப்புக்கள் ஜாதி அமைப்புக்கள் தங்களுக்கு அடியாட்களை சேர்க்கவே

  • Sathiya Moorthy - Salem,இந்தியா

    மதுரை திருப்பரங்குன்றம் கண்மாய் தற்போது ஆக்ரமிக்கப்படுவதாக உணர்கிறேன். கண்மாயின் தென்மேற்கு பகுதியில் காம்பௌண்ட் சுவர் கட்டப்பட்டு கண்மாயின் உள்ளே குத்துக்கல்லும் நடப்பட்டுள்ளது. தினமலர் இதை ஆராய்ந்து ஆவண செய்து கண்மாய் யை காப்பற்றுமாறு கேட்டு கொள்கிறேன்.

  • natesa -

    the new educational system is going to produce migration labours from Tamil Nadu.

Advertisement