Advertisement

மலம்பட்டியில் சேதமான பெரியாறு பாசன கால்வாய்

Share
சிவகங்கை:சிவகங்கை அருகே மலம்பட்டியில் பெரியாறு பாசன கால்வாய் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.

சிவகங்கை மாவட்ட பாசன விவசாயிகளுக்கு பெரியாறு பாசன கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்டம் மேலுார் அருகே கால்வாய் பிரித்து விடப்பட்டு மலம்பட்டி, கூட்டுறவுபட்டி, நாமனுார், திருமலை வழியாக சோழபுரம் வரை பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதின் மூலம் இப்பகுதி விவசாயிகள் ஒரு போக சாகுபடி செய்து வருகின்றனர். அதுவும் பெரியாறு பாசன வரத்து கால்வாய்கள் தடையின்றி இருந்தால் மட்டுமே தண்ணீர் முறையாக வந்து சேரும்.

ஆனால், சிவகங்கை அருகே மலம்பட்டியில் பெரியாறு பாசன கால்வாய் பக்க வாட்டு சுவர்கள் சேதமுற்று, தண்ணீர் விரயமாகும் விதத்தில் உள்ளது. எனவே சேதமான கால்வாய்களை செப்பனிட்டு தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement