Advertisement

டவுட் தனபாலு

Share
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் சங்கத்தினர், மூடப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, வரும், 10 முதல், அவற்றை திறக்க உத்தரவிட்டுள்ளேன். 50 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

'டவுட்' தனபாலு: அப்போ, சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், கோவில் பூசாரிகள், மதுபான பிரியர்கள் உங்களை சந்தித்து, கோரிக்கை விடுத்தால், சினிமா தியேட்டர்கள், கோவில்கள், சென்னையில், டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிடுவீர்களோ என்ற, 'டவுட்' வருகிறதே!

***

தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன்: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இதுவரை, 70க்கும் மேற்பட்ட கொரோனா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அவற்றை ஏற்காமல், ஆளும் அரசு செயல்படுகிறது. இதனால், தமிழக மக்களுக்குத் தான் இன்னல் ஏற்படுகிறது. சென்னையை அடுத்து மதுரை, 'ஹாட்ஸ்பாட்டாக' மாறி வருகிறது.

'டவுட்' தனபாலு: கொரோனா உலகளாவிய புதிய தொற்று. அதன் போக்கு எப்படி இருக்கும் என, உலக சுகாதார அமைப்பினருக்கே தெரியாது. இதில், உங்கள் தலைவர் கூறும் யோசனையை, எப்படி அரசு ஏற்க முடியும். அவர் என்ன, விஞ்ஞானியா அல்லது வைரஸ் பற்றி ஆராய்ந்தவரா என்ற, 'டவுட்' இதனால் வருகிறதே!

***

பத்திரிகை செய்தி: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டியிருந்தாலோ, மாநிலத்தைக் கடந்து வேறு மாநிலத்திற்குச் செல்வதாக இருந்தாலோ, இ- - பாஸ் அவசியம் என, தமிழக அரசு கெடுபிடி விதித்துள்ளது. இந்நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., கு.க.செல்வத்திற்கு, இ- - பாஸ் வழங்கப்பட்டதா; என்ன காரணத்தை சொல்லி, இ - பாஸ் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

'டவுட்' தனபாலு: அரசியல் பிரபலங்களுக்கு, இ - பாஸ் கெடுபிடி கிடையாது என்பதை, ஆளும் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் சுற்றுப்பயணங்கள் நிரூபிக்கின்றன. இ - பாஸ் கெடுபிடி, அப்பாவி மக்களுக்கு மட்டும் தான் என்பதும், 'டவுட்' இல்லாமல் புலனாகிறது!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  10 ம் தேதிமுதல் உடற்பயிற்சி கூடங்கள் அனுமதி... எத்தனை பேருக்கு? ஹோட்டல் களுக்கே 50% தான். ஒரு சின்ன இரண்டு அறைகொண்ட இடத்தில கொரோனா பரவதா?

 • மோகன் -

  சுடலை யை பற்றி என்ன நினைத்து நீங்க எழுதுகிறீர். அவன் முக்காலும் வுணர்த்தவன் அல்லவா. அவன் ஒரு வார்த்தை சொன்னால் அது 100அர்த்தம் உள்ளதல்லவா.

 • N S - Nellai,இந்தியா

  "விஞ்ஞானியா அல்லது வைரஸ் பற்றி ஆராய்ந்தவரா?".... ஐயா அவர் நடமாடிய பல்கலைக்கழகத்தின் வாரிசு. அவருக்கு எல்லையே தெரியும். "ஏட்டுல எழுதி" மகா கவி. .....

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ரஜினி, உதயநிதி எல்லாரும் இ பாஸ் வாங்கியா சென்றார்கள் கீரைக்காரம்மா தாம்பரத்திலிருந்து கோயம்பேடு அல்லது கிண்டிக்கு வர இ பாஸ் வேண்டும். அதையும் ரிஜெக்ட் செய்துவிட்டு ஆயிரத்தைக்கொடு இரண்டாயிரத்தைக்கொடு என்று பிடுங்குவார்கள் எது எதிலெல்லாம் பணம் பார்க்கலாம் என்றுதான் இன்று இ பாசும் ஒரு வழியாகியுள்ளது

Advertisement