Advertisement

போட்டி பலமாக இருக்குமோ?

Share
'பரவாயில்லையே... இந்த அம்மாவும் நல்லா அரசியல் பேசத் துவங்கிட்டாங்களே' என, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா பற்றி முணுமுணுக்கின்றனர், அந்த மாநில மக்கள்.

தன் கணவர் தீவிர அரசியலில் இருந்தாலும், அம்ருதா, அதில் ஆர்வம் காட்டியது இல்லை. சமூக ஆர்வலராகவே, தன்னை அடையாளப்படுத்தி, பல சேவைகளை செய்து வருகிறார்.வேறு எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாமல் இருந்த அம்ருதா, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், சமீப காலமாக அதிரடியான கருத்துக்களை தெரிவித்து, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த தற்கொலை வழக்கில், போலீசார் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதாவும், மும்பையில் மனித நேயம் மரித்து விட்டதாகவும், சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 'சாதாரண மக்களும், ஏழைகளும் இனி மும்பையில் வசிக்க முடியாது' என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார். அம்ருதாவின் இந்த கருத்து, மஹாராஷ்டிரா மக்களிடையே, 'அடடே...' என, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆளும் சிவசேனா கட்சியினரோ, 'அடுத்த தேர்தலுக்கு, தேவேந்திர பட்னவிஸ் தான், நமக்கு சவாலாக இருப்பார் என பார்த்தால், இந்த அம்மாவும் அதிரடியாக களத்தில் குதிக்கிறாங்களே... போட்டி கடுமையாகத் தான் இருக்கும் போலிருக்கிறது' என, கவலையுடன் கூறுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement