LOGIN
dinamalar telegram
Advertisement

கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ 3 லட்சம் கொள்ளை

Share
திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே, மலைப்பாதையில் பைக்கில் வந்த டாஸ்மாக் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடித்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் அருகே, பீமகுளத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் விற்பனையை முடித்து விட்டு நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், சென்னாம்பேட்டையை சேர்ந்த சரவணன், 40, அம்பேத்கார் நகரை சேர்ந்த முருகன், 30, ஆகிய விற்பனையாளர்கள், பல்சர் பைக்கில் வசூலான மூன்று லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, பீமகுளத்திலிருந்து, ஆலங்காயம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெரிய முடக்கு என்ற பகுதியில், எதிரே பைக்கில் வந்த மூன்று பேர், டாஸ்மாக் ஊழியர்களை மடக்கி, கத்தியை காட்டி மிரட்டி, மூன்று லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். வாணியம்பாடி தாலுகா போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement