Advertisement

டவுட் தனபாலு

Share
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: தமிழக மக்கள், 80 ஆண்டுகளாக, இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். பல காலகட்டங்களில், தங்கள் உணர்வை, போராட்டங்கள் வழியே வெளிப்படுத்தி உள்ளனர். 1965ல், ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற, அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், பல்வேறு போராட்டங்களை, தீவிரமாக நடத்தினர்.

'டவுட்' தனபாலு: 1965ல் இருந்த நிலை வேறு; இப்போதைய நிலை வேறு. அப்போதைய பொருளாதார கொள்கை, இப்போது இருப்பது போல இல்லை. இன்னும் குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவது சரி தானா என்ற குரல், தமிழகத்தில் வலுக்கிறதே; அது, முதல்வருக்கும் கேட்கவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'தமிழகத்தில், மும்மொழிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படாது; இரு மொழிக் கொள்கையே தொடரும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. இதைத் தான், பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்துகிறது.

'டவுட்' தனபாலு: விபரம் தெரிந்த அரசியல் தலைவரான நீங்களே இப்படி சொல்லலாமா... மூன்று மொழியல்ல; முப்பது மொழிகளை நம் வாரிசுகள் படித்தால் தான், எதிர்காலத்தில், பல நாடுகள், மாநிலங்களுக்கும் சென்று, செல்வங்களை சேர்க்க முடியும். இந்த விஷயத்தில் நீங்களும், அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக, இரு மொழி கொள்கையை ஆதரிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருது!

***

பத்திரிகை செய்தி: தென்காசி மாவட்ட பதிவாளராக நேற்று பொறுப்பேற்ற, சு.பாலு, கோவில் நிலங்களை பாதுகாப்பதற்காக முதல் உத்தரவை பிறப்பித்தார். அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட, 17 சார் - பதிவாளர் அலுவலக எல்லைக்குள் உள்ள கிராமங்கள், கோவில் நிலங்கள் குறித்த விரிவான பட்டியலை அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு, கோவில் நிலங்களை பாதுகாப்பதற்கான உறுதியை அளிக்கிறது.

'டவுட்' தனபாலு: பட்டியலை கேட்டதற்கே இந்த பாராட்டு என்றால், கோவில் முழுமையும், ஆக்கிரமிப்பு, சட்ட விரோத கையகப்படுத்துதலில் இருந்து அந்த அதிகாரி மீட்டு விட்டால், ஹிந்துக்கள், அவருக்கு கோவில் கட்டி வழிபட்டு விடுவரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. அந்த அளவுக்கு, கோவில் நிலங்கள், 50 - 60 ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளன!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்க்கும் அத்தனை அரசியல்வாதிகளும் மக்களின் எண்ண ஓட்டத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்கின்ற "டவுட்" தான் எனக்கு ............

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இங்குதான் எந்த பணிக்கும் லஞ்சம் லட்சக்கணக்கில் அழ வேண்டுமே என்று இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு, மாநிலங்களுக்குப் பறந்துவிடுகிறார்கள். அதற்குத் தகுதியான நூறு மொழிகளைக்கூடக் கற்க தயாராக இருக்கிறார்கள் இனி இந்த இருமொழி பஜனை விலை போகாது முதல்வர் கடிதமாக எழுதிக்கொண்டே ...... இருப்பார் நீட் கடிதம் சென்ற இடத்துக்கு இதுவும் போய்விடும்

Advertisement