Load Image
Advertisement

ஒரே நாளில் 4 கோவில்களில் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி; போலீசார் விசாரணை

ஓசூர்: கெலமங்கலத்தில், ஒ?ரே நாளில் நான்கு கோவில்களில், அடுத்தடுத்து திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்திலிருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில், பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள், அம்மன் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தாலி செயின், கம்மல், உண்டியல் பணம் மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த அம்மனுக்கு சாற்றும் புடவைகள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். அதேபோல், கெலமங்கலம் பஜார் தெருவிலுள்ள, விநாயகர் கோவில் உண்டியல் மற்றும் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவிலின் உண்டிலை உடைத்து, காணிக்கை பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள, ஐயப்பன் கோவில் உண்டியல் காணிக்கையையும் திருடி சென்றுள்ளனர். அடுத்தடுத்து, நான்கு கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கெலமங்கலம் பகுதியில் கடந்த, 1ல், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், 52 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதற்கு அடுத்த நாளே, திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதை வைத்து, கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement