Advertisement

நில அளவை கட்டண உயர்வு: விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

Share
திருப்பூர்:வருவாய்த்துறை அறிவித்துள்ள, நில அளவை உள்ளிட்ட பணிகளுக்கான கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக அரசு, நில அளவை மற்றும் நில அளவை மேல்முறையீடு, உட்பிரிவு செய்தல், வரைபடம் வழங்குதல் போன்ற கட்டணங்களை, அபரிமிதமாக உயர்த்தியுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், ஊத்துக்குளி ஒன்றியக்குழு நிர்வாகிகள், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:நில அளவை கட்டண உயர்வு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கடுமையாக பாதிக்க செய்யும். நில அளவை பிரிவில், அலுவலர் பற்றாக்குறையால், ஊழல் அதிகம் நடக்கிறது. இவற்றை முறைப்படுத்த வேண்டும். நில அளவை, மேல்முறையீடு, உட்பிரிவு, வரைபடங்களுக்கான கட்டண உயர்வை, உடனடியாக ரத்து செய்ய, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நில அளவை கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென, தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement