Advertisement

தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 71.7 சதவீதமாக உயர்வு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 71.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


தெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,083 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,786 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 11 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 530 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,114 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,502 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 71.7 சதவீதமாக உள்ளது. ஒப்பிடுகையில் தேசிய சராசரி 64 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 11,359 பேர் வீட்டுத் தனிமையிலும், 17,754 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். நேற்றுமுன்தினம் முதல் நேற்றிரவு வரை 21,011 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 2,083 பேருக்கு தொற்று உறுதியானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement