Advertisement

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு இளம் போலீசாரை பயன்படுத்த முடிவு

Share
அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் பாதுகாப்புக்காக இளம் வயது போலீசாரை பயன்படுத்த உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.

வரும் ஆக்ஸ்ட்5 ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உ.பி., மாநில தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைமச் செயலாளர் ஆர்.கே.திவாரி மற்றும் கூடுதல் செயலாளர் ஆவானிஸ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு 45 வயதிற்கும் குறைவான கொரோனா பாதிப்பு இல்லாத தனிமைப்படுத்துதலில் உள்ள போலீசாரை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா

    இனி பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாது சும்மா GDP பிச்சிக்கிட்டு போகும்

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    ரோம் பத்திக்கிட்டு எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாம்..

    • PRSwamy - New York,யூ.எஸ்.ஏ

      ஐயா என்ன திராவிடர் கழகமோ? சுடலை என்னமோ லண்டன் போணுமாமே? இந்தியால இல்லாத மருத்துவர்களா? என்ன சொல்லுரிக?

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    முழு டைனோசோரை ஒரு மாஸ்க்குக்குள் மறைத்து பொய்க்கதை சொல்லி ரீல் விடுறாங்க. கட்டுக்குள் இருக்குன்னு.. இந்தியா பத்திக்கிட்டு எரியுது 17 லட்சம் தொற்றுக்களுடன்.. பின்னாலே பத்திக்கிட்டு எரியுது ஆனால் மொத்தமா அமுக்கிட்டு ராமர் கோவிலை தொறக்க போறாரு மூடர் கூட தலைவர்.

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    இளம் போலீசார்.. ம் ம் ம் ம் ..

  • Covaxin - Bharat Hindustan,இந்தியா

    ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் ஸ்ரீ ராம்.... ஜெய் மோடிஜி... நமோ நமோ நமோ... மீண்டும் மீண்டும் நமோ ஆட்சியே...

Advertisement