Advertisement

புதிய வரைபடத்தை ஐ.நா.விற்கு அனுப்பியது நேபாளம்

Share
காத்மாண்டு: புதிதாக வெளியிட்ட வரைபடத்தை ஐ.நா.விற்கும், கூகுள் தேடுதல் வலைதளத்திற்கும் அனுப்பி வைத்தது நேபாளம்.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை கடந்த மே மாதம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் நேபாள பார்லி.,யின் கீழவையில் கடந்த ஜூன் 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த புதிய வரைபட மசோதா, நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில் இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து நோபாளம் நாட்டின் மாகாணங்கள் தலைநகர் என மாற்றி அமைக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஆங்கில மொழியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் தயார் செய்துள்ளது. தூதரக உறவுகளுக்காக சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டி ஐ.நா. தலைமையகத்திற்கும், முன்னணி தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Darmavan - Chennai,இந்தியா

    இதற்கு இந்தியா ஏன் ஆட்சேபனை தெரிவித்து பழைய படத்தை அனுப்பவில்லை.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அடுத்ததாக நேபாளத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக காண்பிக்கும் வரை படத்தை இந்தியா ஐநாவுக்கு அனுப்பலாம்.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்த தேசங்கள் வறுமைக்கு தள்ளப்படுவது வரலாற்றில் நிறைய இருக்கிறது.

  • Raj - Chennai,இந்தியா

    இந்தியாவின் பதில் என்ன?

  • SAPERE AUDE -

    இது இடதுசாரி நேபாளத்தில் உள்ள கூட்டணி அரசின் ஒரு விஷமத் தனமான முயற்சி. அங்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்கள் வறுமையை அழிக்க எந்த முயற்சியையும் எடுக்காமல் மக்களை திசைதிருப்ப இம்மாதிரி மலிவான அரசியல் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது அங்குள்ள இடதுசாரி கூட்டணி.

    • அப்பாவி - coimbatore

      சுருக்கமா சொன்ன இந்தியாவில் நம்ம மோடிச்சீ ஆட்சி மாதிரி

Advertisement