Advertisement

ஒரே நாளில் இரு மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ்

Share
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரில் இன்று (ஆக.,01) அதிகபட்சமாக சென்னையில் 1,385 பேரும், விருதுநகரில் 1,084 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,074 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, காஞ்சிபுரத்தில் 368 பேருக்கும், தேனியில் 327 பேருக்கும், செங்கல்பட்டில் 314 பேருக்கும், திருவள்ளூரில் 305 பேருக்கும், விருதுநகரில் 286 பேருக்கும், தூத்துக்குடியில் 243 பேருக்கும், திருவண்ணாமலையில் 242 பேருக்கும், கோவையில் 238 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உயிரிழப்பு



இன்று சென்னையில் 27 பேரும், மதுரையில் 10 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், கன்னியாகுமரி, திருநெல்வேலியில் தலா 6 பேரும், செங்கல்பட்டு, விருதுநகரில் தலா 5 பேரும், தென்காசியில் 4 பேரும், கடலூர், திண்டுக்கலில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், வேலூரில் தலா 2 பேரும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 99 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

டிஸ்சார்ஜ்



இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,385 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று விருதுநகரில் 1,084 பேரும், செங்கல்பட்டில் 435 பேரும், திருவள்ளூரில் 392 பேரும், தூத்துக்குடியில் 337 பேரும், தேனியில் 299 பேரும், தஞ்சாவூரில் 288 பேரும், காஞ்சிபுரத்தில் 268 பேரும், ராணிப்பேட்டையில் 241 பேரும், கோவையில் 216 பேரும், மதுரையில் 208 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்




Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement