Advertisement

தமிழகத்தில் இதுவரை 1.90 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்

Share
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,01) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,010 ஆக உள்ளது. இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரித்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,822 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 57 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 121 ஆய்வகங்கள் (அரசு-59 மற்றும் தனியார் 62) மூலமாக, இன்று மட்டும் 60,580 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 27 லட்சத்து 18 ஆயிரத்து 718 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,544 பேர் ஆண்கள், 2,335 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,52,651 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 99,060 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 966 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 99 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,034 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,738 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement