Advertisement

ராஜ்யசபா எம்.பி., அமர்சிங் காலமானார்

Share
புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான அமர்சிங், சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64.


கடந்த சில மாதங்களாக, கிட்னி தொடர்புடைய பிரச்னைகள் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திருமணமாக மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2011 ல் அமர்சிங்கிற்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவராக முலாயம் சிங் இருந்த வரை, அவருக்கு நெருக்கமானவராக அமர்சிங் இருந்தார். பின்னர் கட்சி, அகிலேஷ் வசம் சென்றதும், அமர்சிங் ஓரங்கட்டப்பட்டார். தொடர்ந்து 2010ல் சமாஜ்வாதியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

பின்னர் 2011ல் ராஷ்ட்ரீய லோக் மஞ்ச் என்ற கட்சியை துவக்கி, 2012 சட்டசபை தேர்தலில் களம் கண்டார். ஆனால், தோல்விதான் அவருக்கு பரிசாக கிடைத்தது. இதன் பின்னர் அஜித் சிங் கட்சியுடன் இணைந்து அமர்சிங் செயல்பட்டார்.

இரங்கல்



அமர் சிங் மறைவுக்கு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்காரி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நிதின் கட்காரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அமர் சிங் மறைவு கேட்டு சோகமடைந்தேன். அவரது ஆன்மா அமைதி பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அமர் சிங் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்



பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அமர் சிங், திறமைமிக்க அரசியல்தலைவராக திகழ்ந்தார். அவருக்கு பல துறைகளிலும் நண்பர்கள் இருந்தனர். அவரது மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    பெஸ்ட் பார்லிமெண்டேரியன் RIP

  • kulandhai Kannan -

    கடைந்தெடுத்த அரசியல் புரோக்கர். UPA ஆட்சியில் பல தகிடுதத்தங்கள் புரிந்தவர்.

  • Tamilnesan - Muscat,ஓமன்

    இவர் நடிகை ஜெயப்ரதாவின் நெருங்கிய நண்பர்.

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    இவர் ஒரு திறமையான மத சார்பற்ற அரசியல் வாதி . மிக திறமையாக முஸ்லீம் கொள்கைகளை ஆதரித்தும் இந்துக்களுக்கு குழி வெட்டியும் செயல் பட்டவர் . திரை மறைவு வேளைகளில் நிபுணர் . திரை மறைவில் காய் நகர்த்துபவர் என்று ஒரு சிறப்பும் இவருக்கு உண்டு .தேச விரோத செயலில் யார் ஈடு பட்டாலும் இவர் ஆதரவு கொடுப்பர் . அவர் போல பல அரசியல் வாதிகள் தமிழ் நாட்டில் உண்டு

    • chinnathambi - chennai,இந்தியா

      தமிழ் நாட்டில் இவரை போல பல அரசியல் வாதிகள் உண்டு ஆனால், இவர் ஒரு விதத்தில் நேர்மையானவர் தான் செய்வது அரசியல் ஆதாயத்திற்காக என்று பலருக்கும் சொல்லியே செய்தவர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையற்ற அரசியல் வியாதிகள் தங்கள் செய்வது பேத்துமால் வேலை என்று தெரிந்த பிறகு கூட அதை தான் செய்யவில்லை என்றோ யாரோ செய்துவிட்டு தங்கள் மீது பழி சுமத்துகின்றனர் என்று கூறுவர்.

  • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

    ஆழ்ந்த இரங்கல்

Advertisement