Advertisement

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் அடுத்த கட்ட சோதனைகளை இந்தியாவில் நடத்த அனுமதி

Share
புதுடில்லி: ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனையை முடித்துள்ள சீரம் இந்தியா மருந்து நிறுவனத்திற்கு, அடுத்தக்கட்ட சோதனைகளை மனிதர்களிடம் செய்ய அனுமதி வழங்குமாறு, மருந்து கட்டுப்பாட்டாளருக்கு வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா. இந்நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்புக்காக ஆக்ஸ்போர்டில் உள்ள ஜென்னர் நிறுவனத்துடனும், ஸ்வீடனில் உள்ள அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது. இவ்விரு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் கோவிஷீல்டு எனும் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாகியுள்ளது. இந்தியாவில் இதனை ஆயிரம் ரூபாய்க்குள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இம்மருந்தின் முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில், 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைக்கான திட்ட அறிக்கையை வல்லுநர் குழுவிடம் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா சமர்ப்பித்தது. அவர்கள் ஆய்வில் சில கூடுதல் தகவல்களை கேட்டதோடு, பரிசோதனை நெறிமுறைகளில் திருத்தங்களை கோரினர். அவற்றை ஏற்று கடந்த செவ்வாயன்று புதிய திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை கூடிய அவசரக் கூட்டத்தில் கோவிட்ஷீல்ட் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி 2 மற்றும் 3-ம் கட்ட ஆய்வு நடத்த அனுமதிக்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்படி டில்லி எய்ம்ஸ், ஜோத்பூர் எய்ம்ஸ், பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., சண்டிகர், ஆந்திரா மருத்துவக் கல்லூரி, விசாகப்பட்டினம் போன்ற நாட்டின் 17 நகரங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 நபர்களிடம் கோவிஷீல்டு மருந்தை சோதிக்க உள்ளனர். இந்த இரண்டு கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் டிசம்பரில் மருந்து தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் அனைவருக்கும் கிடைக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    அதை ஏன் இங்கிலாந்தில், ஐரோப்பிய நாடுகளில் பண்ணமுடியாது ? பரிசோதனை எலிகள், இந்தியாவில் தான் சீப்பாக கிடைக்கும். செத்தால் எவனும் கேள்வி கேட்கமுடியாது.. மக்களுக்கு அப்படி ஒரு "பாதுகாப்பு"..

  • Somiah M - chennai,இந்தியா

    வெற்றி பெற வாழ்த்துவதோடு பிரார்த்தனையும் செய்வோம் .

  • S. Narayanan - Chennai,இந்தியா

    உங்கள் ஆய்வுகள் வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள். சோதனைகளை விரைவு படுத்தி உலக மக்கள் அனைவரையும் கொரோனாவிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறோம். நன்றி.

Advertisement