Advertisement

எத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது: பிரியங்கா

Share
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் மாயமாகி 8 நாட்களுக்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய காங்., பொதுச்செயலர் பிரியங்கா, உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு மந்தமாக இருப்பதாகவும், எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப்போகிறது எனவும் விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி, கடந்த ஜூலை 25ம் தேதி மாயமானார். இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அவரது இருசக்கர வாகனம் ஒரு இடத்தில் கவிழ்ந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் ட்ரோன்களை விட்டு தேடிய நிலையில், வழக்கறிஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, உ.பி.,யில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., அரசை கடுமையாக விமர்சித்தார். அவர், டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உத்தர பிரதேசத்தில் குற்றமும் கொரோனாவும் கையை மீறி போய்க்கொண்டிருக்கிறது. வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி என்பவர் கடத்தப்பட்டு 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கான்பூர், கோரக்பூர், புலந்த்ஷெஹர் என்று ஒவ்வொரு சம்பவத்திலும் சட்டம் ஒழுங்கு மந்தமாக செயல்படுகிறது. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப்போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (40)

 • madhavan rajan - trichy,இந்தியா

  இந்திய மக்கள் பலகாலமாக தூங்கிக்கொண்டே தவறானவர்களுக்கு ஓட்டுப்போட்டார்கள். 2014 க்குப் பிறகுதான் விழித்துக்கொண்டு தவறானவர்களை ஒதுக்கி இருக்கிறார்கள். பொறுங்கள் அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த அட்டூழியத்தையெல்லாம் களைந்து நல்லது செய்யவேண்டும் என்றால் சிறிது காலம் ஆகும். பாஜக ஆட்சியில் இருக்கும்வரை உங்கள் குடும்பம் கட்சித்தலைவர்களும் தூங்க முடியாது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது: பிரியங்கா???அவர் கேட்பது என்னவென்றால் என் அன்னை தம்பி போன்ற எம் பிக்களை ஏன் காலி செய்யசொல்லவில்லை ஏன் அரசு தூங்குகின்றது இது தான் அதன் அர்த்தம். என்ன பியங்கா நான் சொல்றது சரிதானே.

 • Darmavan - Chennai,இந்தியா

  உன் கட்சி வளர்த்த ஜிகாதி தீவிர வாதமே காரணம் .முளையிலேயே கிள்ள வேண்டிய தீவிரவாதி மரமாக வளர்த்து விட்டு இப்போது மற்றவர் மேல் பழி சொல்வது வஞ்சகம்.

 • unmaitamil - seoul,தென் கொரியா

  சரி அடுத்த நாலு வருடத்திற்கு எமெர்சன்சி / அவசரநிலை அறிவித்து எல்லாத்துக்கும் சரிபன்னீருவோமா ??? எப்படி சவுரியம் ?? போமா....

 • Gnanam - Nagercoil,இந்தியா

  அம்மணி, சும்மா வாய்ப்பேச்சு பேசுவதை விட்டு, போலீஸ் அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து துப்பு துலங்க செய்யலாமே..

Advertisement