Advertisement

இந்தியாவில் இறப்பு விகிதம் குறைகிறது

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் விகிதம் குறைந்து கொண்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்; இந்தியாவில், இன்று கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் விகிதம் 2.15 சதவீதமாக உள்ளது. இது, முதல் ஊரடங்கு ஆரம்பித்த பின்னர் ஜூன் மாத மத்தியில் 3.33 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், குறைந்து கொண்டு வருகிறது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 36, 569 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனாவிலிருந்து 10,94, 374 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீள்பவர்களின் சதவீதம் 64.53 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    இடம் பெயர் மாற்றப்பட்டுள்ளது.. மகன் இருப்பது அமெரிக்கா, ஃபுளோரிடா மாநிலத்தில். பெற்றோர் இருப்பது பழனியில். பிப்ரவரி மாதத்தில் பம்பாயில் இருக்கும் மகள் வீட்டுக்கு அப்பா, அம்மா போகிறார்கள். மார்ச் மாதம் ஊரடங்கினால் ஊருக்கு திரும்பமுடியவில்லை. மகள் வீட்டில் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் லேசாக ஒரு காய்ச்சல் வந்து போகிறது. அப்பா நலமாக தான் இருந்தார். காய்ச்சல் இல்லை. ஆனால் திடீர் என்று மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது என்கிறார். அவர்களிடம் ஆக்சிமீட்டர் இருந்தது.. போட்டு பார்த்தால் அப்பாவுக்கு ஆக்சிஜன் 52 என்று காட்டுகிறது. மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். கோவிட் வார்டில் இடமில்லை என்கிறது நிர்வாகம். அதுவரைக்கும் சாதாரண வார்டில் இருங்கள் என்று சொல்ல அங்கே தனிமைப்படுத்தப்படுகிறார் அப்பா. இன்னமும் கோவிட் பரிசோதனை முடிவு வரவில்லை. நிச்சயம் இது கோவிட் தொற்றால் வந்த ஹைபாக்சியா தான். அப்பா பாத்ரூம் செல்கிறார். மூச்சு விட முடியாமல் பாத்ரூமிலேயே உயிர் போகிறது. இது தெரிய ஒரு மணிநேரம் ஆகிறது. இப்போது மாலை 7 மணி.. உடலை தர மறுக்கிறது நிர்வாகம். நம்மில் மாலை ஆறு மணிக்கு மேல் தகனம் செய்வதில்லை என்பதை உறவினர்கள் சொல்லியும் கேட்கவில்லை நிர்வாகம். கோவிட் சோதனை பாசிட்டிவ் வந்துள்ளது என்பதை சொல்ல மறுக்கிறார்கள். இரவோடு இரவாக 10 மணிக்கு கூட இருக்கும் 18 உடல்களோடு, ஆமாம், 18 உடல்களோடு அப்பாவையும் தகனம் செய்கிறது.. இறப்பு சான்றிதழில் சாவுக்கு காரணம், "நிமோனியா, மூச்சு திணறல், நெஞ்சடைப்பு" என்று முடிகிறது. ஒரே மகனுக்கு அவனுடைய நேரப்படி காலை ஆறு மணிக்கு அப்பாவுடைய கதை முடிந்து விட்டது, சாம்பல் கூட மிஞ்சவில்லை என்று கதறல். தாயிடமிருந்து.. மகனுக்கு அழக்கூட முடியவில்லை. ஒரு இரவில், ஒரு மருத்துவமனையில் 19 கோவிட் சாவுகள் சாதாரண சாவுகள் ஆகின்றது. எல்லாம் ரோஜா தோட்டம் போல இருக்கிறது என்று நமது பத்திரிக்கை படம் காட்டுகின்றது . பிரதமர் கோவிலை திறக்க மும்முரமாக இருக்கிறார்.. ஆந்திராவில் தாயையும், தந்தையையும் ஒரே வாரத்தில் பறிகொடுத்து இருவரையும் காணமுடியாத மகள் இருக்குமிடம் அமேரிக்கா தான்.. சாவுக்கு காரணம், இருவருக்கும் நெஞ்சு சளி, மாரடைப்பு தான்.. கோவிட் தொற்றா ?? அப்படீன்னா என்ன? வாங்க ராமர் கோவிலை சுற்றி பார்ப்போம்..

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    முழு டைனோசோரை ஒரு மாஸ்க்குக்குள் மறைத்து பொய்க்கதை சொல்லி ரீல் விடுறாங்க. கட்டுக்குள் இருக்குன்னு.. இந்தியா பத்திக்கிட்டு எரியுது 17 லட்சம் தொற்றுக்களுடன்.. பின்னாலே பத்திக்கிட்டு எரியுது ஆனால் மொத்தமா அமுக்கிட்டு ராமர் கோவிலை தொறக்க போறாரு மூடர் கூட தலைவர்.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    விரைவில் கொரோனா உலகை விட்டே ஒழியும்.

Advertisement