Advertisement

கொரோனா சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்: தனியார் மருத்துவமனை மீது அரசு அதிரடி நடவடிக்கை

Share
சென்னை: கொரோனா சிகிச்சை மேற்கொண்ட நோயாளியிடம் 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம் எனவும், அதற்காக நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தையும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடு திரும்பும் போது நடந்தப்படும் சோதனை வரை அனைத்திற்கும் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சை மேற்கொண்ட நோயாளியிடம் இருந்து 19 நாளுக்கு ரூ.12.20 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்து தமிழக சுகாதார துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • ஆரூர் ரங் -

    Be Well என அழைத்து நோயாளியை BILL மூலம் WELL லுக்குள் தள்ளி விட்டு விட்டார்களே .( ஆஸ்பத்திரி பெயரை நான் சொல்லமாட்டேனே😉 )

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சும்மா ஒரு மிரட்டல் இதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு கட்டிங் அதிமுகவுக்கு போகுதாம்

  • Somiah M - chennai,இந்தியா

    மக்கள் நன்மை அடைய வேண்டுமானால் அரசு அந்த மருத்துவ மனையின் பெயரை அறிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் ..அப்படி செய்தால்தான் மக்கள் பயன் அடைவர் .இல்லை என்றால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல ஆகிவிடும் . .

  • S. Narayanan - Chennai,இந்தியா

    மருத்துவமனையின் பெயரை வெளியிடமாட்டாங்க. ஏனென்றால் அதிகாரிகள் நடத்தின பேச்சுவார்த்தை மற்றும் வாங்கின கட்டிங் மக்களுக்கு தெரிந்து விடும். எல்லாம் வேஷம்.

    • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

      வெளியிடுவாங்க, ஆனால் அதன் உரிமையாளர் மதம், ஜாதி பார்த்து ஒதுங்கி விடுவார்கள்.

  • N Sankar - Tirunelveli,இந்தியா

    மிக்க நல்லது. அதிகம் வசூலித்த கட்டணத்தை திருப்பி தர எந்த முயற்சியும் நடக்கவில்லை அல்லவா?

Advertisement