Advertisement

காதல் தகராறில் காதலியின் தந்தை அடித்துக்கொலை

Share
திருநெல்வேலி : கடையநல்லூர் அருகே காதல் தகராறில் காதலியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டார்.


தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் நாகராஜ் (54). இவரது மகள் சுப்புலட்சுமி ( 23 ). இவரும் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் ராஜ் ( 27) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர் .


இந்நிலையில் நாகராஜ் தனது மகளுக்கு சீவநல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்துகொண்டார் . இதனை அறிந்த முருகன் ராஜ், தானும் சுப்புலட்சுமியும் ஒன்றாக இருந்த போட்டோ வை திருமணம் பேசி முடிக்கப்பட்ட வருக்கு அனுப்பி உள்ளார் .இதனை அறிந்த நாகராஜ் கடந்த மாதம் 30 ஆம் தேதி கண்மணியாபுரம் சென்று முருகன்ராஜை சத்தம் போட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.


மேலும் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் நாகராஜ் , முருகன்ராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். நாகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முருகன்ராஜ் தென்காசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர் . இதில் நாகராஜ் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement