Advertisement

7 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ., பந்தலூரில் 9 செ.மீ., தேவாலா, பாலவிடுதியில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் 5 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement