Advertisement

ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி

Share
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

புதிதாக வாங்கப்பட்ட கிரேனை பரிசோதனை செய்த போது சரிந்துவிழுந்தது. தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு உயரிழ சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட போலீஸ் ஆர்கே மீனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

விபத்து குறித்து தகவலறிந்த குடும்பத்தினர், கப்பல் கட்டும் தளம் முன்னர் குவிந்தனர். தங்களை உள்ளேவிட போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உள்ளே இருக்கும், தங்களின் குடும்பத்தினரின் நிலை குறித்து தெரியவில்லை என தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • ஆரூர் ரங் -

    வளைகுடா நாடுகளிலிருந்து ரிகன்டிஷன் செய்த பழைய ஜே சி பி , லோடர், கிரேன் பொன்றவற்றை நிறைய இறக்குமதி செய்கின்றனர். நம்மூர் உயிர்கள்தான் மலிவாயிற்றே

  • rasheed - ,

    எந்த வேலை ஆரம்பம் முதல் அனுபவம் உள்ளவர் ஆலோசனையே முக்கியம் அவசர படுவதோ பதட்டமோ இருக்க கூடாது ரஷீத் திருப்பத்தூர்

  • svs - yaadum oore,இந்தியா

    இந்த காரோண காலத்தில் விசாகபட்டினத்தில் தொடர்ச்சியாக வாயு கசிவு உட்பட விபத்துகள் ...முதல்வர் ரெட்டி ஆந்திராவில் மூன்று தலைநகர் வேண்டும் என்று கோரிக்கை ...இந்த விபத்துக்களையும் கவனித்தால் தேவலை ....crane testing சரியில்லையாம் ...புதிதாக வாங்கிய Crane இப்படி விழுந்தால் என்ன பாதுகாப்பு முறைகள் ??....

  • N S Sankaran - Chennai,இந்தியா

    விசாகபட்டினத்துக்கு நேரம் சரியில்லை, முதலில் எல் ஜி தொழிற்சாலை தீ விபத்து, அப்புறம் மேலும் ஒரு தனியார் பேக்டரி விபத்து இப்போது ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில்.

  • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

    வீடியோவை பார்க்கும்போது, பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடித்த மாதிரி தெரியவில்லை. இறந்தவர்கள் குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

    • அறவோன் - Chennai,இந்தியா

      This is due to the improper design and overloading while testing the crane...

Advertisement