Advertisement

விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்

Share
புதுடில்லி: புதிய கல்விக் கொள்கையில் விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது. புதிய கல்விக் கொள்கையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளது. இதில் விருப்ப மொழித் தேர்வாக இந்திய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேபோல் வெளிநாட்டு மொழிகளான கொரியன், ஜப்பான், தாய், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், ரஷ்யன் மொழிகளும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவில், வெளிநாட்டு மொழிகள் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருந்த சீன மொழியான மாண்டரின், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்னை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சுமார் 100 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், விருப்ப மொழி பாடத்தில் இருந்து சீன மொழியான மாண்டரினும் நீக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (16)

  • SAPERE AUDE -

    இது தவறான அணுகுமுறை. கல்வியில் அரசியலைக் கலப்பது தவறு. எந்த தேசத்திலும் ஆள்பவர்கள் மாறுவார்கள் ஆனால் அவர்களது தாய்மொழி மாறாது. எல்லா மொழிகளையும் கற்று அறிவை செம்மையாக்குவதே கல்வியின் குறிக்கோள்.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    Natesan Narayanan அப்போ ஏன் தமிழக அரசியல் வியாதிகள் நமது நாட்டில் அதிகம் பேசப்படும் ஹிந்தியை வேண்டாம் என்கிறார்கள்?

  • Ganesan Madurai -

    அருமை

  • Somiah M - chennai,இந்தியா

    இந்த மாதிரி வெத்துவேட்டு செயல்களினால் யாருக்கு என்ன பிரயோஜனம் ?

    • Balaji K S - Citizen,இந்தியா

      வெத்துவேட்டு இருந்தாலும் அதுவும் முக்கியமே ...இஷ்டத்துக்கு செய்ற எல்லாத்துக்கும் குறை சொல்ல சில தரித்திரம் புடிச்ச ஆளுங்க இருக்க தான் சேருங்க...

  • Mithun - Bengaluru,இந்தியா

    அதான் தமிழ்நாட்டில் உள்ள சீனாவின் அடிமைகள் அரசுக்கு எதிராக அறிக்கை விடுறாங்களா.

Advertisement