Advertisement

குழந்தைகள் படிப்பிற்காக தாலியை அடமானம் வைத்து டிவி வாங்கிய தாய்

Share
குடகு: தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகும் பாடத்தை, குழந்தைகள் பார்ப்பதற்காக, தாலியை அடகு வைத்து பெண் ஒருவர் டிவி வாங்கியுள்ளார். இதனையறிந்த பலரும் , அந்த பெண்ணுக்கு உதவி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் ரடேர் நகநூர் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி சலவாடி. இவரது கணவர் முத்தப்பா , கூலி தொழிலாளி. கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலை எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தைக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஒரு குழந்தை 8 ம் வகுப்பும் மற்றொரு குழந்தை 7 ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. தூர்தர்ஷன் சேனலிலும் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பள்ளி ஆசிரியர்கள், அதனை பார்த்து குறிப்பு எடுக்கும்படி அறிவுரை வழங்கினர். இதனால், கஸ்தூரியின் குழந்தைகள் வீட்டில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று டிவி பார்த்து பாடம் படித்து வந்தனர். இதில் சில பிரச்னைகள் ஏற்படவே, குழந்தைகள் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், டிவி வாங்குவதற்காக அக்கம் பக்கத்தினரிடம் கஸ்தூரி கடன் கேட்டு பார்த்தார். ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தாலியை அடகு வைத்து டிவி வாங்கி, குழந்தைகளுக்கு பாடம் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் தகவல் பரவி தாசில்தார் வரை சென்றது. அவரும் விசாரணை நடத்தி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தார். அப்பகுதி எம்.எல்.ஏ., ஜமீர் அகமது ரூ.50 ஆயிரமும், அமைச்சர் சிசி பாட்டீல் 20 ஆயிரமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இது தொடர்பாக கஸ்தூரி கூறுகையில், தூர்தர்ஷன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. எங்களிடம் டிவி இல்லை. குழந்தைகள் பக்கத்து வீடுகளுக்கு சென்று டிவிபார்த்து வந்தனர். டிவி மூலம் பாடங்களை கவனிக்க வேண்டும் என ஆசிரியர் கூறிய போதுதான், குழந்தைகளின் எதிர்காலம் பிரச்னையில் உள்ளது தெரிந்தது. டிவி வாங்க யாரும் கடன் கொடுக்கவில்லை . இதனால், எனது தாலியை அடமானம் வைத்து டிவி வாங்கினேன். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • S. Narayanan - Chennai,இந்தியா

  குழந்தைகளுக்காக தாய் எதையும் செய்வாள் என்பது உலக இயல்பு. ஆனால் வசதி இல்லாதாய்க்கு அரசு நிச்சயம் உதவ வேண்டும்.

 • rasheed - ,

  தாய் வாழ்த்துக்கள் நீ எங்களுக்கு கல்வி கண் கொடுத்த தாய் உன்னை எப்படி புகழ்வது பாராட்டுவது படிக்காத நீ உன் குழந்தை கண்கள் திறந்து விட்டாய் கல்வி உலகம் கொடுத்தாய் நன்றி ரஷீத் திருப்பத்தூர்

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அவர்களின் பேங்க் அக்கௌன்ட் தகவல் சொன்னால் உதவி செய்ய வசதியாக இருக்கும் அல்லவா.

 • Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மக்களின் இந்த ஏழ்மையைப் பாருங்கள்.இப்படியிருக்க அரசு சொத்துக்களையும், ஊழல்,அடாவடி கொள்ளை, வழிப்பறி கும்பல்களுக்கு எந்தமாதிரி தண்டனை உறுதிப்படுத்த வேண்டும், சிந்தியுங்கள் மக்களே,அரசியல்வாதிகளே,அதிகாரிகளே தன்சுகபோக வயிற்றையும் வாழ்க்கையையும் நடத்த பிறர் பணத்துக்காக காத்திருக்கும் நபர்களே என்று மாறும் இந்த நிலை? வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.

 • மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் -

  ஆக இந்த கோர சம்பவத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி பதிவி விலக வேண்டும்.

  • Janarthanan - Dubai

   உங்க தலைமையகம் கோடௌன் கிடக்கும் கலைஞ்சர் டிவி அனுப்பி வையுங்க தல நம்ம கர்நாடக ஆட்சியை பிடித்து விடுவோம்

Advertisement