Advertisement

அமெரிக்காவில் விமானங்கள் மோதியதில் 7 பேர் பலி

Share
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரு சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் (67) உயிரிழந்தார். குடியரசு கட்சியை சேர்ந்த இவரின் மறைவுக்கு, பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி, விமானி என 6 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் சால்டோட்னாவைச் சேர்ந்த பைலட் கிரிகோரி பெல்(57), கன்சாஸைச் சேர்ந்த டேவிட் ரோஜர்ஸ் (40), தென் கரோலினாவைச் சேர்ந்த காலேப் ஹல்சி(26), ஹீதர் ஹல்சி(25), ஓல்ட் மேக்கே ஹல்சி(24) மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து எப்.ஏ.ஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Radhakrishnan - Pune,இந்தியா

    வானத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததாலும் மோதிக் கொண்டு விட்டன இனிமேல் வானத்தில் டிராபிக் சிக்னல் நிறுவுவதற்கு ஒரு காண்டிராக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும்

    • தல புராணம் - மதுரை,இந்தியா

      "அம்பானி டிராபிக் சிக்கனல்" சுக்கு இந்திய விமான டிராபிக் கண்ட்ரோல் ஒப்பந்தம் தரப்படும். மோசடி அறிவிப்பு.. ஹா ஹா

Advertisement