Advertisement

தென்காசி விவசாயி உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

Share
திருநெல்வேலி : தென்காசி அருகே, வனத்துறையினர் விசாரணையில் மர்மமாக உயிரிழந்த விவசாயி உடல், எட்டு நாட்களுக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே, வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி, அணைக்கரை முத்து, 76; காய்கறி தோட்டத்தில் அனுமதியின்றி, மின்வேலி அமைத்திருந்தார்.ஜூலை, 22ல் வனத்துறை, மின்வாரிய துறையினர், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்து இறந்தார். 'வனத்துறையினர் தாக்கியதால் தான் இறந்தார்' எனக் கூறி, உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். அவரது மனைவி பாலம்மாள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் முன்னிலையில், அணைக்கரைமுத்து உடலுக்கு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது, 'வீடியோ'வில் பதிவு செய்யப் பட்டது. பின், குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.அவரது மகள் வசந்தி கூறுகையில், ''நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில், வனத்துறையினர் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement