Advertisement

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேதம்: அமைச்சர் தகவல்

Share
சென்னை: 'தமிழகத்தில், கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன' என, சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில், நோயின் தன்மைக்கேற்ப, அலோபதி முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு, 'ஆரோக்கியம்' திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட, 17 மூலிகைகள் அடங்கிய, ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கனுாயம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கடுக்காய் உள்ளிட்ட, 27 பொருட்களால் தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட, 11 பொருட்களால் தயாரிக்கப்படும், கூஷ்மாண்ட ரசாயனம் போன்றவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன.

இவற்றை காலை மற்றும் இரவு என, இருவேளை சாப்பிட, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மருந்துகளை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் செயல்படும், ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் பெற்று கொள்ளலாம். நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருந்துவ கல்லுாரி மருத்துவமனையிலும், எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்று கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியர், மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும். ஏற்கனவே, சித்தா மருந்தான கபசுர குடிநீரும், ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30 சி ஆகியவையும், எவ்வித கட்டணமில்லாமல் வழங்கப்படுகின்றன.இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள், கொரோனா சிகிச்சையை மேம்படுத்த வலுப்படுத்துவதாக அமையும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சித்த ஆயுர்வேதம் மட்டும் என்பது பாரபட்சம். பேயோட்டும் மந்திரவாதி உடுக்கை அடிப்பவன் தாயத்து வியாபாரி குறி சொல்பவர்கள் தொக்கம் எடுப்பவர்கள் என எல்லாவகை பாரா மெடிக்கல் மருத்துவத்துக்கும் இடம் கொடுக்கணும்

 • Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் பாதிக்கப்படுவது, தனியார் மருத்துவ மனை கட்டணமும் மருந்தும் சிகிச்சையும், அனைவருக்கும் ஆதார் அட்டையைப்போல் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெற எல்லோருக்கும் எல்லா சிகிச்சைக்கும் ஏற்பாடுகள் செய்யவேண்டும். எங்கு பார்த்தாலும் தனியார் மருத்துவமனை அதேபோன்று அரசு மருத்துவமனைகள் அதிகப்படுத்தாதற்கு காரணம் என்ன? பொதுமக்கள் பாதுகாப்பில்லாத குண்டாயிசம் கொலைசெய்து கொள்ளை அடிப்பது, வழிப்பறி, பிறர் சொத்தை அபகரிப்பது இதற்கு நம் காவல்துறையும் நீதிமன்றமும் நாடினால் நீதி எப்போது கிடைக்கும், இது ஊருக்கே தெரிந்த விசயம். கோவையில் இரவில் முகமூடி கொள்ளையர்கள் பொதுமக்கள் மூலம் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்டறியப்பட்டு காவல்துறை ரோந்துப் பணியை அதிகரித்தார்கள். இவ்வாறு செய்தால் உடணடி எண்கவுண்டர் செய்ய சட்டம் இயற்றப்படாதது ஏன்.தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணக்கொள்ளை. இவற்றிற்கெல்லாம் பதில் உண்டா இன்றைய,கடந்த அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள், நீதியரசர்கள், மனித உரிமை அமைப்புகள், அன்றாட பிழைப்புக்காக கட்சி நடத்தும் கட்சி பிரமுகர்கள், இவையெல்லாம் உங்கள் பார்வைக்கு தெரியவில்லையே.திண்ணைப்பேச்சு பேசியே மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஊரார் பணத்தில் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டால், எப்போது இதையெல்லாம் சரிப்படுத்துவது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்பா? செயல்படுங்கள் இன்றே, வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.

 • ஆரூர் ரங் -

  உடலிலுள்ள கூடுதல் எதிர்ப்பு சக்தியினால்தான் கொரோனா திடீர் மரணங்களே ஏற்படுகின்றன . OVER REACTION TO THE VIRUS . எதிர்ப்பு சக்தி கூட்டும் மருந்துகள் என்பது சிரிப்பை வரவழைக்கிறது

 • blocked user - blocked,மயோட்

  சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து வேலை செய்யத்தான் செய்கிறது. அதை ஒழுங்கான ஆய்வின் மூலம் உலகுக்கு நிரூபித்துக்காட்ட வேண்டியது அரசின் கடமை.

 • Darmavan - Chennai,இந்தியா

  இதை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும்.சித்த மருந்தை பலர் இறந்த பிறகு ஆஸ்பத்திரி மாபியா கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த பிறகு செய்வது கண் துடைப்பு வேலை

  • Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா

   நீயெல்லாம் பூமிக்கு பாரம்

Advertisement