Advertisement

சர்வதேச விமான சேவைக்கு 31 வரை தடை

Share
புதுடில்லி : சர்வதேச பயணியர் விமான சேவைக்கான தடை, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச், 22ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனினும்,'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை, ஏர் - இந்தியா விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சர்வதேச பயணியர் விமான போக்குவரத்திற்கான தடை, ஜூலை, 15லிருந்து, 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இறுதி நாளான நேற்று, இந்த தடையை, வரும், 31ம் தேதி வரை நீட்டித்து, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, குவைத் ஆகிய நாடுகளுடன், குறிப்பிட்ட அளவிலான பயணியருக்கு பரஸ்பரம் விமான சேவை மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில் இருந்து பயணியரை அழைத்துச் செல்லவும், வெளிநாடுகளில் சிக்கியோரை அழைத்து வரவும், 2,500 விமான சேவைகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஏர் - இந்தியா, ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், மே, 6 - ஜூலை, 30 வரை, இரண்டு லட்சத்து, 67ஆயிரத்து, 436 பயணியரை அழைத்து வந்துள்ளன. இதர விமான நிறுவனங்கள், நான்கு லட்சத்து, 86 ஆயிரத்து, 811 பயணியரை கொண்டு வந்து சேர்த்துள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • blocked user - blocked,மயோட்

    சகஜ நிலை திரும்ப இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

Advertisement