Advertisement

முத்தலாக்: காங்., மீது பா.ஜ., புகார்

Share
புதுடில்லி : 'முத்தலாக் தடை சட்டத்தை, 1980ம் ஆண்டுகளிலேயே, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக, அதை செய்ய தவறி விட்டது' என, காங்கிரஸ் மீது, மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முஸ்லிம்களில், மூன்று முறை, 'தலாக்' கூறி, மனைவி யிடம் இருந்து, கணவர் விவாகரத்து பெறும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்தாண்டு நிறைவேற்றியது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் முதலாமாண்டு தினத்தையொட்டி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது: கடந்த, 1980களில், ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதே, பார்லிமென்டில் முத்தலாக் தடை சட்டத்தை, அப்போதைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும்.

ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, லோக்சபாவில், 400 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில், 150 உறுப்பினர்களும் இருந்தனர்.அப்போது, எளிதாக இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரஸ் அரசு, அந்த சட்டத்தை நிறைவேற்றவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், ''காங்கிரஸ் கட்சியினருக்கு, முஸ்லிம் பெண்களின் நலனை விட, ஓட்டு வங்கி அரசியல் தான் முக்கியமாக உள்ளது. ''அதனால் தான், பார்லிமென்டில் பெரும்பான்மை இருந்தபோதும், முத்தலாக் தடை சட்டத்தை, காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • unmaitamil - seoul,தென் கொரியா

    பெண்ணுக்கு தாலி மற்றுமொரு அணிகலன். கிருத்துவர்களும், முஸ்லிம்களும் எல்லோரும் அணிகின்றனர். ஆனால் வேகாத வெயிலுள்ள கருப்பு துணில ஓடம்பு முழுவதற்கும், பர்தா என்ற உரையை மாட்டிகிட்டு அலையுறது பெண் வன்கொடுமை. அத சரிபன்னீட்டு, அப்பறம் தாலிய பத்தி பேசலாம்.

  • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

    பொது சட்டம் ஒன்றே நிரந்தர தீர்வு. இந்துக்களுக்கும் வேண்டாம், இஸ்லாமியருக்கும் வேண்டாம் இல்லை கிருத்தவர்களுக்கும் வேண்டாம்.இந்தியர்களுக்கு என்று மட்டும் இனிமேல் சட்டம் இயற்றுங்கள்.

  • Sami Sam - chidambaram ,இந்தியா

    இந்திய மக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் தேவை

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    எங்கே சோசியலிசம் பேசுகிறவர்கள். பெண்ணுரிமை பேசுபவர்கள். ஒட்டு அரசியல் நடத்துவர்களுக்கு சமூக அக்கறை ஏது. Tea மாஸ்டர் வந்தபிறகு art 370, முத்தலாக் நிறைவேற்ற பட்டன. கருத்து சொல்பவர்கள் வரலாறை திருப்பி பார்க்கவும்

  • blocked user - blocked,மயோட்

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370 ஐ ரத்து செய்ய காங்கிரஸ் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட்டது கிடையாது. எல்லைகள் நாசமாக தனி அந்தஸ்த்து பிரதான காரணம். இன்றுவரை காங்கிரசுக்கு தனி அந்தஸ்த்து பற்றிய தெளிவான பார்வை கிடையாது.

Advertisement