Advertisement

குஷ்பு விவகாரத்தால் காங்கிரசில் கொந்தளிப்பு; விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப டில்லி முடிவு

Share
காங்கிரஸ் தலைமை விஷயத்தில், ராகுலுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ., அரசின், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளதால், காங்கிரசில் அவருக்கு எதிராக கொந்தளிக்க துவங்கி உள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்த விவகாரத்தில், நடிகை குஷ்புவிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. குஷ்புவின் கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானாவும் பதிலடி கொடுத்துள்ளதால், குஷ்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை - 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வகிக்கிற நடிகை குஷ்பு, 'மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறேன்' என, கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் கொள்கை, நிலைப்பாட்டுக்கு எதிராக, குஷ்பு தெரிவித்த கருத்து, தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

'ரோபோ' அல்ல'



டுவிட்டர்' பக்கத்தில், குஷ்பு கூறியிருப்பதாவது: என் நிலைப்பாட்டில் இருந்து, காங்கிரஸ் வேறுபடுவதற்காக, ராகுலிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் தலையை ஆட்டும், 'ரோபோ' அல்ல; கைப்பாவையும் அல்ல. உண்மையை தான் பேசுகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதில், குஷ்பு உறுதியாக உள்ளார். அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியதாவது: காங்கிரஸ், கருத்து சுதந்திரம் உள்ள கட்சி. எந்த ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் விவாதிக்க முடியும். கட்சி அமைப்புக்குள் பேசினால், அதற்கு வரவேற்பு உண்டு. பொதுவெளியில் பேசினால், அது, அரசியல் முதிர்ச்சியற்றது. விரக்தியில் இருப்பவருக்கு, யோகா சிறந்த மருந்து. அவர், ஏதோ லாபம் எதிர்பார்த்து பேசியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா கூறுகையில், ''சமீப காலமாக, காங்கிரஸ் கட்சி பற்றி, சமூக வலைதளங்களில், குஷ்பு அவதுாறு பரப்பி வருகிறார். புதிய கல்விக் கொள்கையில், சொந்த கருத்தாக, குஷ்பு பேசியது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''பொறுப்பான பதவியில், குஷ்பு இருக்கிறார். தன் சொந்த கருத்து என தெரிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது. ''அவரை யாரும், ரோபோவாக இருக்க சொல்லவில்லை. கட்சி கொள்கைக்கு எதிரான கருத்து சொல்லாமல் இருந்தால் போதும்,'' என்றார்.

புதிய கல்விக் கொள்கைக்கு, குஷ்பு ஆதரவு தெரிவித்த விவகாரம், காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குஷ்புவிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

காங்.,கில் தொடர்வேன்!



''நான் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன்,'' என, நடிகை குஷ்பு கூறியுள்ளார்.காங்., தலைமை விஷயத்தில், ராகுலுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ., அரசின் கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அதனால், அவர் பா.ஜ.,வில் சேருவார் என, தகவல் வெளியானது. இது குறித்து குஷ்பு கூறுகையில், ''நான் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். பா.ஜ.,வில், நான் சேரப் போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை,'' என்றார்.

- நமது நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (21)

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இவருக்கு எங்கும் தங்க முடியாது - கற்புக்கரசி அல்லவா

  • sankaseshan - mumbai,இந்தியா

    ஆனாலும் பச்சையப்பனுக்கு ரொம்ப பேராசை அடுத்த தேர்தலுக்கு கட்சி இருக்குமா தெரியலை .

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    பணம் வாங்கியபிறகு சொந்த அபிப்ராயங்களை வெளியே சொல்லக்கூடாது. காங் இவரை உடனடியாக செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்.

  • Radj, Delhi - New Delhi,இந்தியா

    அரசியல் பற்றி ஒன்றும் தெரியாத ஒரு நபரை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தால் இப்படி தான் நடக்கும். இவர்களுக்கு பதவி கொடுத்தால் வட்ட செயலாளர் போன்ற பதவி தரவேண்டும். கட்சி வளர்ச்சி பற்றி சிந்திப்பார்கள். நேராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்ததால் இது போன்ற செயல் நடக்க தான் செய்யும். முதலில் கட்சி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்க வேண்டும்.

  • ராம.ராசு - கரூர்,இந்தியா

    திருமதி.குஷ்பூவின் கருத்து சரியே என்றாலும் ஒரு பிரதான கட்சியின், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வகிக்கிற ஒருவர் கட்சித்தலைமையின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக கருத்தைச் சொல்லுவது சரியானது. அது கட்சித் தலைமைக்கு மீறிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் பார்த்தால் அனைத்துக் காட்சிகளிலும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் இருக்கவே இருப்பார்கள். அத்தனைபேரும் அவரவர் கருத்தில் இருந்தால் கட்சித் தலைமை என்பதற்கு, கட்டுப்பாட்டிற்கு பொருள் இல்லாததாகிவிடும். பாரதிய ஜனதா கட்சியில் திரு.நரேந்திர மோடி, திரு.அமித்ஷா சொல்லும் கருத்துக்கு எதிராக யாரும் கருத்து சொல்லவே மாட்டார்கள். மாறாக அதில் குறையே இருந்தாலும் அதற்கும் சில காரணங்களை சொல்லி அவர்களைப் கருத்துக்கு ஆதரவு நிலையையே வெளிப்படுத்துவார்கள். பொதுவாகவே அரசியலில் எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியின் அனைத்து முடிவுகளுக்கும் எதிர்ப்பான நிலையிலேயே இருப்பார்கள். அதற்க்கு சரியான உதாரணம் "ஆதார்" அட்டை திட்டம் கொண்டுவந்தபோது இப்போதைய ஆளும் கட்சி பாராளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு எதிப்பைக் காட்டியது. காட்டியது என்பதைவிட முடைக்கேயே விட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த "ஆதார்" அட்டைதான் அனைத்திற்கும் என்று நிலையை உருவாக்கிவிட்டது. மத்திய அரசின் இப்போதைய கல்விக் கொள்கையில் சிறப்பான அம்சங்கள் இருக்கிறதோ இல்லையோ, இந்த கொரோனா காலத்தில், மக்களாட்சி நாட்டில், எதிர்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல், விவாதிக்காமல் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவருவது என்பது நடுநிலை அரசியல் நோக்கர்கள் கருத்தாக மட்டுமல்ல சாமானியர்களின் கருத்தாகவும் இருக்கும். இப்படியான கருத்தைக் கூட சொல்லாதவர், ஒரு கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற, செய்தித் தொடர்பாளர் என்றால், அது சரியான நிலைப்பாடு அல்ல. நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த இந்தியாவிற்கும், வளரும் நாடுகளில் முன்னணி நாடாக இருக்கும் இந்த நிலைக்கும் தற்போதைய ஆளும் கட்சியின் ஏழு வருட ஆட்சியால் மட்டுமே வந்தது அல்ல. இன்றைய அனைத்து முன்னேற்றத்திற்கும் அடித்தளம் இட்டவர்கள் முந்தைய ஆட்சியாளர்கள்தான். ஆனால் அதை இப்போதைய ஆளும் கட்சி எந்த இடத்திலும் சொல்லாது, பாராட்டாது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்களை, ஆட்சியை குற்றம் சாட்டுவது சர்வசாதாரணமாக இருக்கிறது. இதுதான் அரசியல். இதை திருமதி.குஷ்பூ போன்றவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் மிகை ஆகாது. பொதுவாக, அரசியலில் ஆளும் கட்சி நல்லதையே செய்தாலும், எதிர்க்கட்சிகள் அது "கடமை" என்ற அளவிலேயே முடித்துக்கொள்வார்கள். மாறாக தப்பித்த தவறிக்கூட பாராட்டிவிட்டு மாட்டார்கள். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அதுவும் தேசிய கட்சிகளுக்கு ரொம்பவே பொருந்தும். அதற்க்கு சரியான உதாரணம் காவேரி நீர்ப் பங்கீடு. அதில் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தமிழ் நாட்டில் ஒன்றாகவும், கர்நாடாகாவில் வேறாகவும் இருக்கும். அது அரசியல். அப்படிதான். அப்படித்தான் ஏதோ ஒரு கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களும் தங்களின் கருத்தாக கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவி வகிக்கிறவருக்கு அரசியல் ஞானம் கொஞ்சம் குறைவு என்றே சொல்லவேண்டும்.

    • Ellamman - Chennai,இந்தியா

      நேர்மையான பதிவு... ஆச்சர்யம்..

    • Ellamman - Chennai,இந்தியா

      ஆச்சர்யத்திற்கு பிற்பாடு நான் கூறியவை எங்கே???

Advertisement