Advertisement

ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது!

Share
இயற்கை, ஒரு பக்கம் எடுத்தால், மறுபக்கம் கொடுக்கவும் செய்கிறது. கொரோனா ஊரடங்கால், வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை மூட்டம் உலகெங்கும் வெகுவாக குறைந்துவிட்டது. புது டில்லி பகுதியில் பாதிக்குப் பாதி புகை மூட்டம் இல்லை.

இதனால், அப்பகுதியில் உள்ள சூரிய ஒளி மின் பலகைகளின் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.இது குறித்து அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வினை அண்மையில் 'ஜூல் ' என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, மார்ச் மாத இறுதியில், டில்லி பகுதியில் சூரிய பலகைகளின் மின் உற்பத்தி, 8.3 சதவீதம் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்தில் 5.9 சதவீதம் கூடுதலாக மின் உற்பத்தி நிகழ்ந்துள்ளது. இதன் மூலம் சூரிய மின் நிறுவனங்களுக்கு லாபம் கணிசமாக இந்த ஆண்டு உயரும் என, ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement