Advertisement

இந்தியா தான் உலகின் தடுப்பு மருந்து மையம்!

Share
வரும், 2021 இறுதிக்குள், உலகெங்கும், 200 கோடி பேருக்காவது கொரோனா தடுப்பு மருந்துகளை வினியோகம் செய்துவிட, உலக சுகாதார அமைப்பின், 'கோவேக்ஸ்' திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இதில் இந்தியா பெரும் பங்களிப்பை செய்யப் போகிறது என, உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசிய இயக்குனர், டாக்டர், பூனம் கேத்ரபால் சிங் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, உலகின் முக்கியமான தடுப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் மையமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. எனவே, “கொரோனா விஷயத்திலும், இந்தியா தான் உலகின் தடுப்பு மருந்து மையமாக” இருக்கும் என, டாக்டர் பூனம் தெரிவித்தார்.

நேற்றுவரை, உலகெங்கும், 25 கொரோனா தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு தரப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன. இவற்றில், ஐந்து முக்கியமான தடுப்பு மருந்து சோதனைகள், மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் உள்ளன.சோதனைகளை விரைவுபடுத்துவதற்காக, 'பைசர்-பயோன்டெக்' போன்ற நிறுவனங்கள், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை ஒரே நேரத்தில் செய்து வருகின்றன.இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள், முதலாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

Advertisement