Advertisement

கரன்ட் பேப்பரில் அடிச்ச கரன்ட்! : கெத்து காட்டியவர், வெத்து வேட்டான கதை

Share
ஆடி மாதத்துக்கே உரிய வண்ணம் ஜிலுஜிலு என காற்று வீசி கொண்டிருந்தது. சித்ரா, மித்ராவும் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து, மொபைல் போனில், 'வாட்ஸ்அப்' பார்த்து கொண்டிருந்தனர்.அதில் படித்த ஒரு தகவலை குறிப்பிட்ட சித்ரா, ''மித்து, கொரோனா டெஸ்ட் எடுத்தவங்களுக்கு, பத்து நாள் கழித்துதான், ரிசல்டே சொல்றாங்க. 'நமக்கு கொரோனா இருக்குதா, இல்லையா?'னு பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகிட்டாங்க,''''அதிலும், அவிநாசியில் ஒரு ஏரியாவில், டெஸ்ட் செஞ்சு, 14 நாள் கழிச்சுதான் 'நெகட்டிவ்'னு சொன்னாங்களாம். இதனால, பலரும் தொடர்ச்சியா புகார் சொன்னதால, 24 மணி நேரத்தில் ரிசல்ட் சொல்லப்படும்னு கலெக்டர் சொல்லியிருக்கார்,''''இனியாவது, சட்டுனு சொன்னா பரவாயில்ல. வீண் டென்ஷனாவது குறைமில்ல,'' இடையில் புகுந்த மித்ரா, ''அக்கா... போலீஸ்காரர் சரண்டர் ஆனதால், பிரச்னை தீர்ந்துடுச்சாம்,''''என்னடி இப்படி மொட்டையா சொல்றே?''''சவுத் ஸ்டேஷனில், புகார் கொடுக்க சென்ற சட்டக்கல்லுாரி மாணவரை, போலீஸ்காரர் ஒருவர் அறைந்து தள்ளிய விவகாரம் குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் போயிடுச்சாம். இதை தெரிஞ்சதும், மாணவரை கூட்டிட்டு வந்து, வருத்தம் தெரிவிச்சு சமாதானம் செஞ்சிருக்காங்க,''''இவங்களுக்கு ஒரு பிரச்னைன்னா, கீழிறங்கிடுவாங்களே...'' சிரித்த சித்ரா, ''புதுசா வந்த அதிகாரி அப்செட் ஆயிட்டாராமா?'' என்றாள்.''கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுங்களே!'''லாக் டவுன் சண்டேயில், ஏகப்பட்ட இடங்களில், சரக்கு வித்தாங்க. இத தெரிஞ்சுகிட்ட கலெக்டர், ரெவின்யூ ஆபீசர்களை அனுப்பி, நடவடிக்கை எடுத்தார். அதுக்கப்பறம்தான், போலீசே போனாங்களாம். 'அவரு சொல்லி செய்ய வேண்டியதா போயிடுச்சே'னு, அதிகாரி 'செம அப்செட்'டா இருக்கிறாராம்,''''அதனால, 24 மணி நேர விற்பனை, 'இல்லீகல் பார்'சில்லிங் இப்படி, 'சரக்கு' மேட்டரில், கடும் நடவடிக்கை எடுப்பாருன்னு நம்பலாம்,''''ம்... பாக்கலாம். அக்கா, சிட்டி போலீசில் முக்கியமான பதவியை பிடிக்க, ஆளுக்கொரு மினிஸ்டரை புடிச்சு மூவ் பண்றாங்களாம்,''''அப்படியா... யாருப்பா, அது?''''ஒற்றர் படையில இருந்த அதிகாரி, புரமோஷனில் போயிட்டாரு. காலியா இருக்கிற இடத்தை புடிக்க, ரெண்டு பேர் மத்தியில் பயங்கர போட்டியாம்,''''ஒருத்தருக்கு, கோவை வி.ஐ.பி.,யும், இன்னொருத்தருக்கு உடுமலை வி.ஐ.பி.,யும் ரெகமன்டேஷன் பண்ற நிலையில், யாருக்கு செல்வாக்கு அதிகமுன்னு, இந்த வாரத்தில தெரிஞ்சிடும்,''''தாலுகா ஆபீஸ் வளாகத்தில், ராத்திரி நேரத்தில், அத்துமீறல் நடக்குதாம்,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''குமரன் ரோட்டில் உள்ள டிரஸ்ஸரி பாதுகாப்பு பணிக்கு, பக்கத்து ஸ்டேஷன் போலீஸ் வர்றாங்க. அவங்க ராத்திரியானதும், ஒரே கலாட்டா பண்றாங்களாம். முக்கிய ஆவணங்கள் இருக்கும் ஒரு ஆபீசில், இப்படி அசால்ட்டா இருந்தா எப்படின்னு, மேல பத்த வச்சுட்டாங்க,''''ஆமா... சரிதானுங்களே,'' என்ற மித்ரா, ''அதிகாரி பேரை சொல்லி செம கலெக்ஷன் பாக்கற நபர்களை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க தெரியுங்களா?''''போலீஸ் ஸ்டேஷனா?''''ஆமாங்க்கா, 'தாரா... ' ஸ்டேஷனுக்கு, கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக, ஒரு 'கரன்ட்' பேப்பர் போயிருக்குது. அதை வச்சு, ரெண்டு பேர், எதிர்பார்ட்டிய வரவழைச்சு, 'அதிகாரி கிட்ட சொல்லி முடிச்சிடலாம். பத்து லகரம் குடுத்துடுங்கன்னு,' பேரம் பேசியிருக்காங்க...''''அப்புறம் என்னாச்சு?''''இந்த விஷயம், அதிகாரிக்கு தெரிஞ்சதால, ரெண்டு பேரையும் உடனே, ஏ.ஆருக்கு, மாத்திட்டாங்க,'' சொன்ன மித்ரா, ''அக்கா, இந்த காளிமுத்துவும், கலைசெல்வனும், பணம் கேட்டு தொந்தரவு பண்றாங்கன்னு வாத்தியார் நேத்து சொன்னாரு. அதனால, ஆதாரத்தோட பெட்டிஷன் போடுங்கன்னு, சொல்லிட்டேன்,''''கரெக்ட்டா சொன்ன மித்து,'' என்ற சித்ரா, ''எப்.ஓ.பி.,யை தடை செஞ்சும் இன்னும் சில பக்கம் வாலாட்டி இருக்காங்க,''புதிய விஷயம் கூறினாள்.'இது எங்க நடந்ததுங்க?'''குடிமங்கலம் ஸ்டேஷனில்தான். போன வாரம், ஒரு காரில், எஸ்.ஐ., கூட ஒரு எப்.ஓ.பி., போனாரு. அவரு காரை ஓட்டிட்டு போயி, லாரியில மோதிட்டாரு. ரெண்டு பேருக்கும் லேசான அடிங்கிறதால தப்பிச்சுட்டு, மூடி மறைச்சுட்டாங்க. ஆனா, ஸ்டேஷனில், அந்நபர் நடமாடிட்டுத்தான் இருக்கார்,''''அவங்க சொன்னாலும் இவங்க கேட்க மாட்டாங்க போல,''''அது உண்மைதானுங்க. இந்த '...மலை' ஸ்டேஷனுக்கு அதிகாரி இப்பதான் வந்தாரு. ஊரை பத்தி பெரிதாக ஒன்னும் தெரியாதுங்கறதால, அவர் வண்டி பைலட், கஞ்சா, லாட்டரி, மது என, எல்லா விஷயத்திலும் செம கலெக்ஷன் பார்க்கிறாராம். ஒற்றர் படை அதிகாரியின் ஆசியோட இப்படி செய்யறாருன்னு ஒேர பேச்சு,''அப்போது, சித்ராவின் மொபைலில், 'அருண் காலிங்' என ஒளிர்ந்ததும், எடுத்து பேசிவிட்டு அணைத்தாள்.''அக்கா, வீரபாண்டி பக்கத்துல இருக்கற ஒரு சொசைட்டியில, அதிகாரிகூட கைகோர்த்து, ரேஷன் கடை பணியாளர்களும் பணத்தை அள்ளி குவிச்சுட்டு இருக்காங்க'''பொறுத்துப்பார்த்த சங்க தலைவர், மினிஸ்டருக்கு 'பெட்டிஷன்' போட்டாரு. இதனால, சும்மா ரெய்டு போனதா கணக்கு காட்டி, அதிகாரிங்க, 4,200 ரூபா 'பைன்' போட்டாச்சுனு, 'சிம்பிளா' முடிச்சுட்டாங்க'' என்றாள் சித்ரா.''ஏன்டி, மித்து, அந்த சொசைட்டியில், தோழர்களும் இருக்காங்கதானே...''''ம்... இருக்காங்க. ஆனா, ஒன்னும் செய்யலே,''''அதானே, அவங்க ஊருக்குத்தான் உபதேசம் செய்வாங்க. இதே மாதிரி, லஞ்ச ஒழிப்புத்துறையில சிக்கின ஒரு அதிகாரி பெரும் செலவு செஞ்சு தப்பி வந்திருக்காரு,''''யாருங்க்கா, அந்த ஆசாமி?''''ஆளுங்கட்சி வி.ஐ.பி.,ங்க ஆசியோட, மீண்டும் அதே பணியில சேர்ந்துட்டாராம். 200 ரூபா வாங்கின ஒரு பெண் ஊழியரை சஸ்பெண்ட் செஞ்சிட்டு, 15 ஆயிரம் ரூபாய் வாங்கி இவரை போன்ற அதிகாரிகளை விட்டுடறாங்க. இது எந்த ஊர் நியாயம் மித்து,''மித்ரா உடனே, ''அக்கா... சொல்ல மறந்துட்டேன். ரமேஷ் போன் பண்ணியிருந்தார். அடுத்த வாரம் இங்க வர்றாராம்,'' என்றதும், ''வரட்டும், பார்க்கலாம்,'' என எழுந்தாள் சித்ரா.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement