dinamalar telegram
Advertisement

சீன எல்லையில் இரு படைகளும் முழுவதுமாக விலக்கி கொள்ள ஒப்புதல்

Share
புதுடில்லி,: இந்தியா - சீனா எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு படைகளையும் முழுவதுமாக விலக்கி கொள்வது என, ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. லடாக்கில், கடந்த மாதம், 15ம் தேதி, எல்லையில் நடந்த மோதலில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர், வீர மரணம் அடைந்தனர். இதற்கிடையே, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த, ஜூலை5ம் தேதி, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ உடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சீன படைகள், 2 கி.மீ., திரும்பச் சென்றன.


இந்நிலையில் இரு தரப்பு படைகளை விலக்கி முழுவதுமாக கொள்வது குறித்து ராணுவ படைத் தளபதிகள் தலைமையிலான, நான்காவது கூட்டம், லடாக்கின் சுஷுலில், 15 மணி நேரம் நடந்தது. இதில் இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் வகையில், கண்காணித்து உறுதி செய்யும் வகையில், படைகள் திரும்பப் பெறும் நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  சீனாவை நம்பக்கூடாது. எலிவளைமாதிரி ஏதாவது பொந்தில் ஒளிந்துகொண்டு படை வாபஸ் ஆகி விட்டது என்று சொல்வான். அதற்க்கு இடம்தரக்கூடாது. போர் என்று ஓன்று வந்து சீனாவை இனி இந்தியா பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன் என்று சொல்லும் அளவில் புரட்டிப்போட்ட வேண்டும். அதுவே இதற்க்கு ஒரு முடிவு தரும். வேறு வழியே கிடையாது.

 • ஆப்பு -

  நடப்பது பொருளாதார யுத்தம். இந்தியா வளரக்கூடாது என்பதே சீனாவின் கனவு. நாமளும் சீனாவுக்கு மார்க்கெட்டை தொறந்து உட்டு நம்ம உள்நாட்டு உற்பத்தியை முடக்கியாச்சு. முதலீட்டாளர்களுக்கு தேவை அமைதியான சூழல். இந்தியாவுக்கு அப்பப்போ இதுமாதிரி குடைச்சல் குடுத்தா முதலீடுகள் குறைய வாய்ப்பு அதிகம். தென் சீனக் கடல் நாடுகளிலும் சீனா அப்படித்தான் நடந்து கொள்கிறது. தைவானை மிரட்டுகிறது. எல்லாம் பொருளாதார போராட்டம். இவ்வளவு ஏன்? கம்யூனிச சைனாவில், அமெரிக்கா கேபிடலிஸ்ட்டுகள் ஏன் இத்தனை வருஷம் முதலீடு செய்தார்கள்? பொருளாதார காரணம் தான்.

 • Darmavan - Chennai,இந்தியா

  எப்போது ஆக்சை சின்னை மீட்கப்போகிறோம்.அது பற்றி ஒரு பேச்சுமில்லை. இதற்கே இவ்வளவு அமர்க்களம்

 • Marcopolo - Chennai,இந்தியா

  இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் நல்லது. போர் என்று வந்தால் இரு நாட்டினருக்கு மிகுந்த சேதம் உண்டாகலாம். எந்த நாடாகிலும் போர் என்ற ஆயுதத்தை எடுக்க கூடாது.

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  We belied two times and this country showed its true face both times.It does not value friendship which Mr.Modi exhibited to the Chinese premier in Chennai. This shows clearly that htey want to flex their muscles and try to inflict fear in hte minds of the neighbouring countries. But it did not know onething, now India is under the leadership of a new man who is friendly with all but will not permit our sovereignty to be tampered with at any cost. The reason for the Chinese wihtdrawal are many, 1.The whole India rised up to boycott Chinese products, 2.The other nations also followed suit in cancelling Chinese orders.Yesterday UK had said by end of the year the 5G equipment order would be cancelled no further order with Chinese firm. Australia also is taking action. USA also started this cancellation. So China's back bone can easily be broken if we are all firm in our decision to boycott their products.3. They understood that the spirit of our Defence forces is at its peak and so it is impossible to stage an easy win over us.4.We not only plan to teach the Chinese its place, but also have the plan to completely liberate Pak Occupied Kashmir at this juncture. 5. The other countries being betrayed by corona and its effect on their finance, htey would stand behind India in hte event of a war with China which is detrimental to its interest.6.By saying they withdraw, they just try to a relaxed atmosphere with Indian Army , just to strike again at the most unexpected time.This country has back stabbed many times. If we do ont learn a lesson from all these, then we have to be ready to loose more and more. While welcoming such peaceful activities, never be in relaxed mood at hte border with tihs not trust worthy neighbour. 7. Though by agreeing to the peace talks, we had foregone this golden opportunity of restoring back the POK, our aim would always be to get back what was lost by the earlier government, in both sides.

Advertisement